தமிழ்

சிந்தனை 340: சோதனைக்கு உட்படுத்தப்படுதல்

ரெம்பிராண்ட், பொதுவுடைமை, Wikimedia Commons வழியாக

காணொளி

சோதனைக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக இனிமை தராமல் இருக்கலாம்; ஆனால் சில வேளைகளில் அதனால் நாம் பெரிதும் பயனடைகிறோம்.  ஆண்டவர் இதைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறார்.  சோதனைக்கு உட்படுத்தப்படுவது பாவத்தூண்டுதல் அல்ல; மாறாக, தமது திருவுளத்திற்கு நாம் இன்னும் ஆழமாகப் பணிந்திருக்க நம்மை அழைப்பதற்காக, ஒரு சோதனையை நாம் தாங்கிக்கொள்ள ஆண்டவர் அனுமதிக்கும் ஒரு வழியாகும்.  ஒரு சோதனை உங்களை நெருங்குவதாக நீங்கள் உணரும்போது, நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், முழந்தாள்படியிட்டு இவ்வாறு செபிப்பதே: “ஆண்டவரே, எல்லாவற்றிலும் உமது திருவுளம் நிறைவேறுவதாக!  நீர் விரும்புவது எதுவாயினும் அதற்கு நான் முழுமையாகப் பணிகிறேன்!”  எத்துணை நிறைவான செபம் இது! குறிப்பாக, ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது இதைச் செபிப்பது எவ்வளவு பொருத்தமானது!  இந்தச் செபம் நீங்கள் சோதனையில் வெற்றிபெற உதவும் (காண்க: நாட்குறிப்பு #1648).

வாழ்வில் ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?  நம்பிக்கை இழந்துவிடுகிறீர்களா?  அல்லது முழந்தாள்படியிட்டு உங்கள் வாழ்வைக் கடவுளிடம் ஒப்படைக்கிறீர்களா?  இதைச் சிந்தித்துப் பாருங்கள்; வாழ்வின் ஒவ்வொரு சோதனையிலும் வெற்றிபெறும் வகையில், எல்லாவற்றிலும் உங்களையே கடவுளிடம் ஒப்படைக்க உறுதிகொள்ளுங்கள்.

ஆண்டவரே, என்னை முழுமையாக உம்மிடம் ஒப்படைக்கிறேன்.  நான் இப்போது இருப்பதையும், இனி ஆக விரும்புவதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.  ஆண்டவரே, அனைத்தும் உமதே.  நீர் விரும்புவதை, நீர் விரும்பும் நேரத்தில், நீர் விரும்பும் விதத்தில் என்னில் செய்தருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

அமல உற்பவ அன்னையின் நவநாள் செபம்
நவம்பர் 29-டிசம்பர் 7

எங்களின் திருவருகைக் கால வளங்கள் அனைத்தையும் காண்க

திருவருகைக் காலத்திற்கான வளங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்