தமிழ்

சிந்தனை 103: கடவுளை அறிதல் சொற்களுக்கு அப்பாற்பட்டது

தூய மூவொரு இறைவன் — வரைந்தவர்: யான் கொர்னெலிஸ் வெர்மெயன்

காணொளி

மூவொரு இறைவனுடன் ஒன்றித்திருப்பதே நம் வாழ்வின் மைய நோக்கமாக இருக்க வேண்டும்.  நாம் அவர்களுடன் உரையாடி, சொற்களால் பேசினாலும், மிக ஆழமான தொடர்பு சொற்களுக்கு அப்பாற்பட்டது.  அது ஓர் ஒன்றிப்பு; நம்மையே கையளித்தல்; அவர்களது இரக்கத்தில் திளைத்தல்.  மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் அவருடன் உரையாடுவதும் நம் ஆன்மாவின் ஆழத்தில் நிகழ வேண்டும்; சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத விதத்தில் புரிந்துகொள்ளப்படும் ஒரு மொழியின் வழியாக அது நிகழ வேண்டும் (காண்க நாட்குறிப்பு #472).

நீங்கள் கடவுளை அறிவீர்களா?  தந்தையையும் மகனையும் தூய ஆவியாரையும் அறிவீர்களா?  நாள்தோறும் அவர்களுடன் ஒன்றித்து, அவர்களிடம் பேசி, அவர்கள் சொல்வதைக் கேட்டு வாழ்கிறீர்களா?  மூவொரு இறைவனின் தெய்வீக ஆட்களை நீங்கள் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.  ஒவ்வொருவரும் தமக்கே உரிய முறையில் “பேசுகிறார்”.  ஒவ்வொருவரும் உங்களை அழைக்கிறார்; உங்களுடன் ஒன்றித்து, உங்களை அன்பு செய்கிறார்.  உங்கள் ஆன்மா தூய மூவொரு இறைவனின் ஆட்களை அறிந்துகொள்ளட்டும்.  அவர்களுடனான உறவு உங்கள் ஆன்மாவின் ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்யும்.

அதிபுனித மூவொரு இறைவனே, தந்தையே, மகனே, தூய ஆவியாரே, என் ஆன்மாவினுள் வந்து தங்கியருளும்.  என் உள்ளத்தின் ஆழத்தில் உம்மை அறியவும் அன்பு செய்யவும் எனக்கு உதவியருளும்.  உம்முடன் ஒன்றித்திருக்கவும், நீர் பேசும் மறைபொருள் நிறைந்த அன்பின் மொழியைக் கேட்கவும் விரும்புகிறேன்.  அதிபுனித மூவொரு இறைவனே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஏப்ரல் 13 – புனித முதலாம் மார்ட்டின், திருத்தந்தையும் மறைசாட்சியும்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்