தமிழ்

சிந்தனை 104: இறை இரக்கச் செபமாலை

படத்தை வழங்கியவர்: Myriams-Fotos தளம்: Pixabay

காணொளி

நமது கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்திற்குச் செபம் இன்றியமையாதது.  நீங்கள் செபிக்கும்போது, உங்கள் உள்ளத்தை இறைவனிடம் கொட்டி, இதயத்திலிருந்து பேசுவது நல்லது.  ஆனால், செபம் உங்கள் விசுவாசத்திற்கும் இறைவனைப் பற்றி நீங்கள் அறிந்துள்ள அனைத்திற்கும் ஏற்பவும் அமைய வேண்டும்.  அது இறைவனைப் பற்றிய உங்கள் உண்மையான அறிவைப் பிரதிபலித்து, அவரது இரக்கத்தை நாட வேண்டும்.  இறைவனின் இரக்கத்தின் மீதான உங்கள் விசுவாசத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செபங்களில் ஒன்றுதான் இறை இரக்கச் செபமாலை.  (காண்க நாட்குறிப்பு #475-476).

நீங்கள் செபிக்கிறீர்களா?  ஒவ்வொரு நாளும் செபிக்கிறீர்களா?  இறைவனின் இரக்கத்தை நீங்கள் இடைவிடாது நாடும் வகையில், உங்கள் செபம் விசுவாசத்தையும் உண்மையையும் மையமாகக் கொண்டுள்ளதா?  நீங்கள் இறை இரக்கச் செபமாலையைச் செபிப்பதில்லை என்றால், ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் அதைச் செபித்துப் பாருங்கள்.  தவறாமல் செபியுங்கள்; அதன் சொற்களில் வெளிப்படும் விசுவாசத்தில் நம்பிக்கை வையுங்கள்.  இந்தச் செபத்தில் உங்களை அர்ப்பணித்துக்கொண்டால், இறைவனின் இரக்கத்தின் கதவுகள் திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.

நித்திய தந்தையே, எங்கள் பாவங்களுக்கும் உலகெங்கும் உள்ளோரின் பாவங்களுக்கும் பரிகாரமாக, உமது அன்பிற்கினிய மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் ஆன்மாவையும் இறைத்தன்மையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  அவரது துயர்மிகு திருப்பாடுகளின் பொருட்டு, எங்கள் மீதும் உலகெங்கும் உள்ளோர் மீதும் இரக்கமாயிரும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பாஸ்கா காலச் செபங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்