தமிழ்

சிந்தனை 143: நம்பிக்கை, நம்பிக்கை, இன்னும் அதிக நம்பிக்கை

இயேசுவே, உம்மை நம்புகிறேன் — williamnyk படைப்பு, உரிமம் CC BY-NC 2.0

காணொளி

இந்த நூலின் ஒவ்வொரு சிந்தனையும் ஓர் இறைவேண்டலுடன் முடிகிறது; ஒவ்வோர் இறைவேண்டலும், “இயேசுவே, உம்மை நம்புகிறேன்” என்ற வேண்டுதலுடன் முடிகிறது.  ஆனால், நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?  நம்புவது என்பது ஒரே ஒருமுறை செய்யும் செயல் மட்டுமல்ல.  அது நாம் செய்கிறோமா, இல்லையா என்பதோடு முடிந்துவிடும் ஒன்றல்ல.  நாம் தொடர்ந்து இன்னும் ஆழமாக நம்ப வேண்டும்.  நாம் கொள்ள அழைக்கப்படும் நம்பிக்கையின் ஆழங்களுக்கு எல்லையே இல்லை.  உங்கள் நம்பிக்கை எவ்வளவு ஆழமாகிறதோ, அவ்வளவு அதிகமாக நம் தெய்வீக ஆண்டவரின் இதயம் தமது இரக்கத்தைப் பொழியத் தூண்டப்படும்.  நம்பிக்கையில் வளர்வதற்கு இன்றியமையாத ஓர் அம்சம், நமது பரிதாப நிலையையும் பாவத்தையும் காண்பதாகும்.  கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கையின்றி நமது பாவத்தைக் காணும்போது, நாம் நம்பிக்கையிழந்து நிற்கிறோம்.  ஆனால், நமது பாவத்தின் கொடூரத்தைக் கண்டு, அதே அளவுக்கு அவரது இரக்கத்தையும் நம்பும்போது, அவர் நமக்குள் வந்து, நம் ஆன்மாக்களைத் தாம் அன்புடன் உறையும் தூய்மையும் புனிதமும் நிறைந்த இடமாக மாற்றுகிறார் (காண்க நாட்குறிப்பு #718).

நீங்கள் கடவுளையும் அவரது அளவற்ற இரக்கத்தையும் நம்புகிறீர்களா?  அப்படியானால், உங்கள் பாவத்தையும் நீங்கள் ஆழமாக உணர்ந்திருப்பீர்கள்.  உங்கள் பாவத்தை நீங்கள் காண்கிறீர்களா?  உங்கள் பரிதாபமான நிலையை உணர்கிறீர்களா?  அப்படியானால், நம்பிக்கையிழக்காதீர்கள்; மாறாக, கடவுளையும் அவர் உங்கள்மீது கொண்டுள்ள நிறைவான அன்பையும் இன்னும் அதிகமாக நம்புவதற்கு அருளால் வழங்கப்பட்ட வாய்ப்பாக அதைக் காணுங்கள்.

ஆண்டவரே, நான் உம்மை உண்மையாகவே நம்புகிறேன்; ஆனால், போதிய அளவு நம்புவதில்லை.  முதலில், எனது அவலநிலையையும் பாவத்தையும் உணர எனக்கு உதவும்.  ஆனால், இந்தப் பரிதாபமான நிலையைக் காணும்போது, நம்பிக்கையிழப்பதற்குப் பதிலாக உம்மை நோக்கித் திரும்ப எனக்கு உதவும்.  என் நம்பிக்கைக்கு ஒருபோதும் முடிவு வராதிருக்கட்டும்; உமது இதயம் திறக்கப்பட்டு, நீர் என்மீது உமது அருளைப் பொழியும்படி, என் நம்பிக்கை தொடர்ந்து ஆழமடையட்டும்.  இயேசுவே, உம்மை நம்புகிறேன்.  இயேசுவே, உம்மை நம்புகிறேன்.  இயேசுவே, உம்மை நம்புகிறேன்.

தூய ஆவியாருக்கு நவநாள் செபம்
பெந்தெகொஸ்தே பெருவிழாவிற்கான தயாரிப்பாகச் செபிக்கப்படுவது
வெள்ளிக்கிழமை, மே 15 – சனிக்கிழமை, மே 23

உயிர்ப்புப் பெருவிழா செபங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்