இறைவனின் இரக்கத்தைப் பற்றிப் பேசுவதில் உங்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறதா? அதையே மீண்டும் மீண்டும் பேசுவதுபோலவும், அது உங்கள் உள்ளத்தைத் தொடாததுபோலவும் உணர்கிறீர்களா? அப்படியானால், இரக்கத்தைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேசுங்கள்; புதிய ஆர்வத்துடன் அதைத் தியானியுங்கள். இறைவனின் இரக்கத்தைக் குறித்து நீங்கள் ஒருபோதும் சலிப்படையக் கூடாது. இறைவனின் இரக்கம் எத்துணை மகத்தானது, எத்துணை நிறைவானது என்பதை விண்ணகத்தில் நீங்கள் தெளிவாகக் காண்பீர்கள்; அதன் அகலத்தையும் விரிவையும் உணர்வீர்கள். அதை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்; அதைத் தியானிப்பதில் ஒருபோதும் சலிப்படைய மாட்டீர்கள்…