தமிழ்

சிந்தனை 353: மகிமைக் கீதம்

கடவுளின் படைப்பில் இயல்பாக அமைந்துள்ள ஒழுங்கையும் தாளலயத்தையும் சார்ந்து, அதன் இயற்கை விதிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே இசை.  சில இசை, உலகியல் உண்மைகளை மகிமைப்படுத்துவதற்குப் படைப்பிலுள்ள இயற்கை ஒழுங்கைப் பயன்படுத்துகிறது.  சில இசை வடிவங்கள் பாவத்தையும் ஒழுங்கின்மையையும்கூட வெளிப்படுத்துகின்றன.  ஆனால்…

சிந்தனை 352: தண்டனையும் குற்றவுணர்வும்

கடவுளின் தண்டனையைப் பற்றிச் சிந்திப்பது இனிமையானதாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அவரது தண்டனைகள் உண்மையானவை என்பதையும், அவை அவரது அளவற்ற இரக்கத்தின் செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆன்மாக்கள் கடவுளிடமிருந்து விலகி, அவரது இரக்கத்தை மறுக்கும்போது, அது அவரது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்துகிறது.  இதன் விளைவாக, கடவுள்…

சிந்தனை 345: இறைவனில் மூழ்குதல்

நீங்கள் எப்போதாவது இறைவனில் திளைத்ததுண்டா?  பெரும்பாலான மக்களுக்கு இது அரிதான ஓர் அனுபவம்; பலருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதே இல்லை.  இறைவனில் திளைப்பது அல்லது மூழ்குவது என்பது, அவரது முன்னிலையில் உங்களையே மறந்துவிட்டதுபோல் உணரும் அளவுக்கு இறைவேண்டலில் ஆழ்ந்திருப்பதாகும்.  இவ்வாறு நிகழும்போது, ஆண்டவர் உங்களை முழுமையாக…

சிந்தனை 344: பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்

இந்தத் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம்.  பாவத்தைத் தவிர்க்க நீங்கள் முனைப்புடன் முயல வேண்டும் என்ற அளவில், அதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும்.  ஆனால், கடவுளின் இரக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பது பெருங்கடலுடன் ஒப்பிடுகையில் ஒரு துளி நீர் மட்டுமே என்பதை உணர்ந்தால், நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்…

சிந்தனை 335: என்றும் மன்னித்தல்

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபிப்பதும், அவர்களை மிகுந்த மரியாதையுடனும் பரிவுடனும் நடத்துவதும் வாழ்வில் செய்வதற்கு மிகவும் கடினமான செயல்களில் அடங்கும். ஆனால் அவர்களை வெறுப்பதாலோ, அவர்கள்மீது கடுமையாகச் சீறுவதாலோ என்ன பயன்? அவர்களுக்கு இந்த “தீங்கை” இழைப்பது, அவர்களுடைய ஆன்மாவைவிட உங்கள் சொந்த ஆன்மாவுக்கே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னியுங்கள்…