தமிழ்

சிந்தனை 344: பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்

படம் வழங்கியது: Pixabay.

காணொளி

இந்தத் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம்.  பாவத்தைத் தவிர்க்க நீங்கள் முனைப்புடன் முயல வேண்டும் என்ற அளவில், அதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும்.  ஆனால், கடவுளின் இரக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பது பெருங்கடலுடன் ஒப்பிடுகையில் ஒரு துளி நீர் மட்டுமே என்பதை உணர்ந்தால், உங்கள் அக்கறைகள் கவலைகளாக மாற நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்.  அக்கறையுடன் இருப்பது என்பது மனச்சான்றுக்கு உண்மையாக இருப்பதாகும்; மனச்சான்றுக்கு உண்மையாக இருப்பது ஓர் அருள்.  ஆனால், கடவுளின் இரக்கத்தின் ஒளியில் உங்கள் பாவத்தை நேர்மையாகவும் முழுமையாகவும் பார்க்கும்போது, உங்கள் பாவம் கடவுளின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்று ஒருபோதும் கவலைப்பட மாட்டீர்கள்.  அதை ஒரே கணத்தில் என்றென்றைக்குமாகத் துடைத்தழிப்பதே அவருடைய மிகப் பெரிய விருப்பம் (காண்க நாட்குறிப்பு #1665).

உங்கள் பாவங்களை மிகுந்த நேர்மையுடன் எதிர்கொள்வதில் உங்களுக்குத் தயக்கம் இல்லையா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.  தயக்கம் இருந்தால், அது அவருடைய எல்லையற்ற இரக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதன் அடையாளமாகும்.  அவருடைய இரக்கத்தைப் புரிந்துகொள்வதே ஒவ்வொரு பாவத்திற்கும் மிகச் சிறந்த மருந்து என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரே, நான் என் பாவத்தைக் காண்கிறேன்; ஆனால் அதை இன்னும் தெளிவாகக் காண விரும்புகிறேன்.  கவலையும் அச்சமும் இன்றி என் பாவத்தை எதிர்கொள்ளும்படி, உமது நிறைவான இரக்கத்தை அறிந்துகொள்ளும் அருளை எனக்குத் தாரும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

புனித அந்திரேயாவின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்
மரபுப்படி நவம்பர் 30 முதல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முந்தைய நாள் வரை நாள்தோறும் 15 முறை செபிக்கப்படுகிறது.

திருவருகைக் காலத்திற்கான வளங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்


ஓர் அருமையான கிறிஸ்துமஸ் பரிசு!

இறை இரக்கம் பற்றிய அன்றாடச் சிந்தனைகள்:
புனித ஃபவுஸ்தினாவுடன் 365 நாட்கள்