தமிழ்

சிந்தனை 321: செராபீன் போன்ற ஆன்மா

ஒவ்வொருவரும் புனித வாழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்; அந்தப் புனித வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியும்.  ஆனால் இறைவன் எப்போதும் சிலரைப் புனித வாழ்வுக்குரிய ஒரு சிறப்புப் பணிக்காக, இன்னும் உயர்ந்த புனித நிலைக்காகத் தேர்ந்தெடுக்கிறார்.  இந்த ஆன்மாக்களை “செராபீன் போன்ற ஆன்மாக்கள்” என்று அழைக்கலாம்.  இதை விளக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு, தண்ணீர் நிறைந்த இரண்டு குவளைகளை ஒப்பிடுவதாகும்.  ஒன்று பெரியது…

சிந்தனை 287: அவமானப் போர்வை

“அவமானம்” என்பது பொதுமக்கள் முன் ஏற்படும் இழிவு, மானக்கேடு, சிறுமைப்படுத்தப்படுதல், சங்கடம் ஆகியவற்றைக் குறிக்கலாம். ஆனால் இயேசுவைப் பற்றிக் கூறும்போது அது தனிப்பொருள் பெறுகிறது. “அவமானப் போர்வை” என்பது இயேசு தமது சிலுவையின் காரணமாகப் பொதுமக்கள் முன் அனுபவித்த இழிவைக் குறிக்கிறது. அவர் பாவி என்றும் பொய்யர் என்றும் தீர்ப்பிடப்பட்டார். மக்களை ஏமாற்றியதாகவும் அரசாங்க அதிகாரிகளின் அதிகாரத்தைச் சீர்குலைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இலக்காக இருந்தார்…

சிந்தனை 285: “ஒளியின் தூதனாக” வந்து ஏமாற்றுதல்

தீயோன் உங்களை ஆழமாக வெறுக்கிறான்.  இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி, நீங்கள் அவரிடம் நெருங்க நெருங்க, அவன் உங்களைத் தாக்க இன்னும் அதிகமாக முயல்வான்.  இந்தச் சிறிய நாயின் குரைப்புக்கு அஞ்சாதீர்கள்.  தீயோன் உங்களை ஏமாற்ற முயலும் மிகவும் பொதுவான வழிகளில் ஒன்று, தன்னை ஒளியின் தூதனாகக் காட்டிக்கொள்வதாகும்.  அவன் இவ்வாறு செய்வது…

சிந்தனை 267: நீதியா, இரக்கமா?

கடவுளின் நீதியைப் பற்றியும் அவரது இரக்கத்தைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதே.  அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.  கடவுளுக்குப் பணிபுரிய மறுத்த வானதூதர்களுக்கு அவரது நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டதுபோலவே, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கும் அது வழங்கப்படும்.  ஆனால், இப்போதைக்கு, கடவுள் இரக்கமுள்ளவர் என்று கூறுவதே இன்னும் பொருத்தமானது.  உண்மையில்…

சிந்தனை 166: கிறிஸ்துவோடு நீங்கள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வல்லமை

நீங்களே எல்லாம் வல்லவராக இருப்பதை, அல்லது எல்லாம் வல்ல ஒருவரின் நெருங்கிய நண்பராக இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை புனித முதலாம் லியோவைப் பற்றிய ஒரு நிகழ்வு இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. ஹூணரான அட்டிலாவும் அவரது வன்முறைமிக்க படையும் உரோமை நகரைச் சூறையாட முயன்றதாகச் சொல்லப்படுகிறது. திருத்தந்தை புனித லியோ…

சிந்தனை 141: வானதூதர்களின் இரக்கம்

வானதூதர் படைகள் என்னும் கொடையை விண்ணகத்தில்தான் நாம் புரிந்துகொள்வோம். மாட்சிமைமிக்க இந்த ஆவிக்குரிய உயிர்களை இறைவன் அன்பினால் படைத்தார். அதிபுனித மூவொரு இறைவனை என்றென்றும் வழிபட்டு ஆராதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிலர் படைக்கப்பட்டனர். இந்த அழைப்பில் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை; எப்போதும் மேலும்…

சிந்தனை 3: இரக்கச் செயலாக வானதூதர்களின் படைப்பு

பொருள்சார் உலகைப் படைத்ததோடு, கடவுள் ஆவிக்குரிய உலகையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார். வானதூதர்களும் ஒவ்வொரு மனித ஆன்மாவும் கடவுளின் தூய அன்பின் கொடைகளே. ஆவிக்குரிய உலகைப் படைத்தபோது, அறியவும் அன்புசெய்யவும் திறன்கொண்ட உயிர்களைக் கடவுள் படைத்தார். அந்த…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…