Willuconquer, CC BY-SA 4.0, Wikimedia Commons வழியாக
உலகம் அழகானது; அது கடவுளின் அழகை வெளிப்படுத்துகிறது. ஆனால் நற்கருணை போன்ற ஆன்மிக உண்மைகள் அதைவிடப் பன்மடங்கு அழகானவை. மிகப் புனித நற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் கடவுளின் அழகைக் காண, உங்களுக்கு நம்பிக்கையின் கண்கள் தேவை. இந்த அழகைக் காணும் உங்கள் பார்வையைக் கூர்மையாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஆராதனை. நாம் நம் ஆண்டவருடன் அனுபவிக்கும் ஒன்றிப்பின் உச்சமாக நற்கருணை உட்கொள்ளுதல் இருக்க வேண்டும் என்றாலும், புனித அப்பத்தில் பிரசன்னமாக இருக்கும் அவரை ஆராதிப்பது, அவருடைய அழகை வெளிப்படுத்துவதன் வழியாக இந்தச் சந்திப்புக்கு உங்களைத் தயாரிக்கிறது. பீடத்தில் கதிர்ப்பாத்திரத்தில் எழுந்தேற்றப்பட்டிருக்கும் அவரை ஆராதிக்க நாடுங்கள்; உங்கள் ஆன்மாவின் கண்கள் அவருடைய அழகில் மெய்மறக்கட்டும் (காண்க: நாட்குறிப்பு #1692).
மிகப் புனித நற்கருணை ஆராதனையில் நீங்கள் எப்போதாவது பங்கேற்கிறீர்களா? உங்கள் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை தவறாமல் நடைபெறுகிறது என்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள். இல்லையென்றால், அருகிலுள்ள ஓர் ஆலயத்தில் நடைபெறும் ஆராதனையில் பங்கேற்க வாய்ப்பைத் தேடுங்கள். ஆராதனை உங்கள் ஆன்மாவுக்கு ஊட்டமளித்து, கடவுளின் அழகை உங்களுக்கு வெளிப்படுத்துகிறது. நற்கருணை ஆராதனையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சிந்தித்துப் பார்த்து, மகிமைமிக்க இந்த வழிபாட்டில் முழு மனதுடன் பங்கேற்க மீண்டும் உங்களை அர்ப்பணியுங்கள்.
ஆண்டவரே, மிகப் புனித நற்கருணையில் என்முன் பிரசன்னமாக இருக்கும் உம்மை மிக ஆழ்ந்த ஆராதனையுடன் ஆராதிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன்; மறைந்திருக்கும் உமது அழகையும் மாட்சியையும் அறிய நாடுகிறேன். அன்பு ஆண்டவரே, நீர் மகிமை நிறைந்தவர். உமது மகிமையை நான் உற்றுநோக்கும்போது, முழுநிறைவான உமது இரக்கத்தின் இதயத்திற்குள் என்னை இன்னும் ஆழமாக ஈர்த்துக்கொள்ளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
திருவருகைக் காலத்திற்கான வளங்கள்
புனித அந்திரேயாவின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்
மரபுப்படி நவம்பர் 30 முதல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முந்தைய நாள் வரை நாள்தோறும் 15 முறை செபிக்கப்படுகிறது.
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





