தமிழ்

சிந்தனை 32: மன்னிப்பின் இரக்கம்

ஜேம்ஸ் திசோ வரைந்த ஈட்டியால் குத்துதல், புரூக்ளின் அருங்காட்சியகம் வழியாக

காணொளி

வாழ்நாள் முழுவதும் பிறருடைய பாவங்களால் நீங்கள் காயப்படுவீர்கள்.  இது தவிர்க்க முடியாதது.  இந்தக் காயத்தை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதே சிந்திக்க வேண்டிய உண்மையான கேள்வி.  அதை விடாமல் பற்றிக்கொண்டு, அதையே எண்ணிக் குமுறுவீர்களா?  அல்லது மன்னிப்பீர்களா?  ஆனால் மன்னிப்பது மட்டும் போதாது.  நீங்கள் மன்னிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த இரக்கம் உங்கள் இதயத்தைப் பரிவால் நிரப்பவும் அனுமதிக்கும் அளவுக்கு இறை இரக்கம் உங்கள் ஆன்மாவுக்குள் ஆழமாக நுழைய நீங்கள் இடமளிக்க வேண்டும்.  ஆழமாக அன்பு செய்யக் கடவுளின் இரக்கம் உங்களைத் தூண்டுவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும்.  உங்களைக் காயப்படுத்தியவர்களுக்காக நீங்கள் செபிக்க முன்வர வேண்டும்; அவ்வாறு செய்வதன் வழியாகக் கடவுளின் அருளை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.  உங்கள் இதயத்திலிருந்து உங்களைக் காயப்படுத்தியவர்களின் இதயங்களுக்கு மன்னிப்பு பாய்ந்துசெல்ல நீங்கள் அனுமதிக்கும்போது, கடவுளின் இரக்கத்தைப் பகிர்ந்தளிப்பவராக இருக்கிறீர்கள் (காண்க நாட்குறிப்பு #31).

உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களுக்கு இயேசுவின் திருஇதயப் பரிவைப் பகிர்ந்தளிப்பவராக இருக்க நீங்கள் பெற்றுள்ள அழைப்பைப் பணிவுடன் சிந்தித்துப் பாருங்கள்.  இது ஓர் உயர்ந்த அழைப்பு; இதற்கு ஆழ்ந்த சரணடைதலும் அன்பும் தேவை.  ஆனால், இதுவே விடுதலைக்கான ஒரே வழி; கடவுளின் இரக்கம் உங்கள் ஆன்மாவையே நிரப்புவதற்கும் இதுவே ஒரே வழி.

ஆண்டவரே, எனக்குத் தீங்கிழைத்த அனைவரையும் மன்னிக்க இன்று நான் முடிவு செய்கிறேன்.  இந்த இரக்கச் செயல் என் மனம், இதயம், உணர்ச்சிவேகங்கள், உணர்வுகள், என் ஆன்மாவின் ஒவ்வொரு பகுதி ஆகிய அனைத்தையும் நிறைத்துப் பெருக உதவியருளும்.  உமது நிறைவான, எல்லையற்ற அன்பை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பவராக நான் விளங்குவேனாக.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்