சிமா தா கொனெலியானோ வரைந்த “தந்தையாகிய கடவுள்”
கடவுளின் உள்ளார்ந்த இயல்பை நம்மால் அறிந்துகொள்ள இயலாது. அவர் நமக்கு அப்பாற்பட்டவர்; ஆழங்காண முடியாதவர். ஆனால் நம் வாழ்விலும் உலகிலும் அவர் ஆற்றும் செயல்களைக் காண்பதன் வழியாக நாம் கடவுளை அறிந்துகொள்ள முடியும். அவரது பண்புகளைப் பாருங்கள். அவரது செயல்களைப் பாருங்கள். உங்கள் வாழ்விலும் பிறருடைய வாழ்விலும் அவர் செய்துள்ளவற்றைப் பாருங்கள். அவர் எல்லாம் வல்லவர், அனைத்தையும் அறிந்தவர், அனைவரையும் அன்புசெய்பவர்; நன்மையான அனைத்தையும் அளவுகடந்து பொழிபவர் (காண்க நாட்குறிப்பு #30).
கடவுளின் ஆழங்காண முடியாத இயல்பையும் உள்ளார்ந்த தன்மையையும் குறித்து இன்று சிந்தியுங்கள். கடவுளின் நிறைவை நம்மால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அறிவதே, அவரை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்கான முதல் படியாகும். இன்று, நம் கடவுளின் மாபெரும் மறைபொருளின் முன் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; நம்மால் தொட இயலாத அவரது இயல்பு உங்கள் இதயத்தைத் தொட அனுமதியுங்கள்.
ஆண்டவரே, நீரும் உமது வழிகளும் எனக்கு அப்பாற்பட்டவை. எனினும், உமது இறைப் பிரசன்னத்தின் மறைபொருளில் நான் உம்மை அறிந்துகொள்கிறேன். ஆண்டவரே, உமது உள்ளார்ந்த இறை இயல்பைக் குறித்து நான் சிந்திக்கும்போது, உம்மீது இன்னும் ஆழமான அன்புகொள்ள ஈர்க்கப்பட எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஜனவரி 31: புனித யோவான் போஸ்கோ, அருள்பணியாளர்—நினைவு நாள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




