திவ்விய நற்கருணை உண்மையிலேயே புனிதமானது. அதற்கு வணக்கம் செலுத்தப்பட்டு, மிகுந்த மரியாதையுடன் அது கையாளப்படுகிறது. நம் ஆண்டவரை நாம் ஒருபோதும் தூக்கி எறியவோ, தரையிலோ மரியாதைக்குப் பொருந்தாத வேறோர் இடத்திலோ விட்டுவிடவோ மாட்டோம். ஆயினும், நற்கருணை அப்பத்தில் பிரசன்னமாக இருக்கும் இயேசுவிடம் காட்டும் அதே மரியாதையுடன் பிறரை நடத்த நாம் அடிக்கடி தவறுகிறோம் (காண்க நாட்குறிப்பு #285).
ஒவ்வொரு மனிதரும் ஒரு நற்கருணைப் பேழை என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சாயலாக இருக்கிறார்; கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மதிப்புமிக்கவராகவும் புனிதமானவராகவும் இருக்கிறார். எல்லா மனிதர்களையும் நாம் இவ்வாறே பார்க்க வேண்டும்; மிகுந்த பயபக்தியுடனும் மரியாதையுடனும் அவர்களை நடத்த முயல வேண்டும். இவ்வாறு செய்வதன் வழியாக, நாம் அறிந்துகொள்ள இயலாத அளவுக்கு நம் தெய்வீக ஆண்டவருக்கு மதிப்பளிக்கிறோம். இன்று நீங்கள் பிறரை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நற்கருணை அப்பத்தில் இருக்கும் நம் ஆண்டவரிடம் நீங்கள் காட்டும் அதே அன்பையும் மரியாதையையும் அவர்களிடமும் காட்டுகிறீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் இயேசுவின் தெய்வீகப் பிரசன்னத்தைக் காண உங்களுக்கு உதவுமாறு அவரிடம் கேளுங்கள்.
ஆண்டவரே, எல்லா மனிதர்களிலும் உம்மை நான் எப்போதும் அன்பு செய்வேனாக. ஒவ்வோர் ஆன்மாவிலும் உம்மைக் கண்டு, அவர்களுக்குள் இருக்கும் உமது தெய்வீகப் பிரசன்னத்திற்கு மதிப்பளிப்பேனாக. ஆண்டவரே, ஒவ்வொரு படைப்புயிரின் இதயத்திலும் நீர் உயிரோடு இருக்கிறீர். நான் உம்மை அன்பு செய்கிறேன்; நான் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் உமது தெய்வீகப் பிரசன்னத்தைச் சந்திக்கும்போது, உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்ய விரும்புகிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இருபத்து மூன்றாம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்
புனித யோசேப்புக்கு நவநாள் செபம். மார்ச் 10-18 வரை செபிக்கப்படுகிறது.
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





