தமிழ்

சிந்தனை 77: ஆண்டவர் அனைத்தையும் அறிவார்

Needpix.com

காணொளி

நம் இறைவனாகிய ஆண்டவர் அனைத்தையும் அறிவார் என்பது முற்றிலும் உறுதியானது.  நமது ஒவ்வோர் எண்ணத்தையும், நமக்குள்ள ஒவ்வொரு தேவையையும், நம்மால் உணர முடிவதைவிட மிக ஆழமாக அவர் அறிந்திருக்கிறார்.  சில வேளைகளில், அவரது நிறைவான அறிவை நாம் உணரும்போது, நம் தேவைகளை நாமே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவை அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கலாம்.  ஆனால், நாம் அவரிடம் கேட்க வேண்டும் என்றே நம் ஆண்டவர் பல வேளைகளில் விரும்புகிறார்.  நம் தேவைகளைப் பகுத்துணர்ந்து, நம்பிக்கையோடும் செபத்தோடும் அவற்றை அவரிடம் ஒப்புக்கொடுப்பதை அவர் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதுகிறார்.  எது சிறந்தது என்று நமக்குத் தெரியாவிட்டாலும், நமது கேள்விகளையும் கவலைகளையும் நாம் அவரிடம் கொண்டுவர வேண்டும்.  இது அவரது நிறைவான இரக்கத்தின்மீது நம்பிக்கை வைக்கும் ஒரு செயலாகும் (காண்க: நாட்குறிப்பு #295).

உங்கள் தேவைகளை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?  வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தெளிவாகச் சொல்ல முடியுமா?  எதற்காகச் செபிக்க வேண்டும் என்றும், நம் ஆண்டவருக்கு உங்கள் அன்றாடப் பலியாக எதை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியுமா?  இன்று நீங்கள் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென இயேசு விரும்புவது என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.  நீங்கள் எதை உணர்ந்து, அவரது இரக்கத்தைப் பெறுவதற்காக அவரிடம் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?  உங்கள் தேவையை நீங்கள் அவரிடம் கொண்டுவரும்படி, அதை அவர் உங்களுக்குக் காட்ட இடமளியுங்கள்.

ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர் என்பதை நான் அறிவேன்.  நீர் நிறைவான ஞானமும் அன்புமாய் இருக்கிறீர் என்பதை நான் அறிவேன்.  என் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் நீர் காண்கிறீர்; என் பலவீனத்தையும் பாவத்தையும் தாண்டி என்னை அன்பு செய்கிறீர்.  நீர் என் வாழ்வைக் காண்பதுபோல நானும் அதைக் காண எனக்கு உதவும். என் தேவைகளை உணரும்போது, உமது இறை இரக்கத்தின்மீது இடையறாது நம்பிக்கை வைக்க எனக்கு உதவும்.  இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.

புனித யோசேப்புக்கு நவநாள் செபம். மார்ச் 10-18 வரை செபிக்கப்படுகிறது.

இருபத்தைந்தாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

தவக்காலத்திற்கான வளங்கள்

தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

மார்ச் 18 – ஆயரும் மறைவல்லுநருமான எருசலேம் நகர் புனித சிரில்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்