பார்தொலோமே எஸ்தேபான் முரில்லோ வரைந்த ‘ஊதாரி மைந்தனின் வருகை’
நமது செபங்களும் இறைவனின் இரக்கமும் தேவைப்படும் ஆன்மாக்கள் ஏராளமாக உள்ளனர். இவர்கள் தங்கள் பாவத்தில் உறுதியாகப் பிடிபட்டிருக்கும் ஆன்மாக்கள். நாம் அவர்களுக்காகச் செபித்தாலும், அதனால் பெரிதாகப் பயன் ஏற்படுவதில்லை எனத் தோன்றுகிறது. நாம் இன்னும் என்ன செய்யலாம்? சில வேளைகளில், நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த பரிந்துரை மன்றாட்டு, மிகத் தாராளமான அன்பால் நிறைந்த ஓர் இதயமே. இந்த ஆன்மாக்கள் மீது மிகத் தூய்மையான, தளராத அன்பு கொண்டிருக்க நாம் விடாமுயற்சியுடன் பாடுபட வேண்டும். இறைவன் இந்த அன்பைக் காண்பார்; நமது இதயங்களில் அவர் காணும் அன்பின் காரணமாக, தமது அன்புப் பார்வையை அவர்கள் மீது திருப்புவார் (காண்க: நாட்குறிப்பு #383).
இறைவனின் இரக்கம் இவ்வளவு தேவைப்படும் அந்த நபர் யார்? இறைவனையும் அவரது இரக்கத்தையும் ஏற்காமல் பிடிவாதமாகவே இருப்பதாகத் தோன்றும் குடும்ப உறுப்பினர், உடன் பணிபுரிபவர், அயலவர் அல்லது நண்பர் யாராவது இருக்கிறாரா? அந்த நபருக்கு உங்களால் அளிக்கக்கூடிய மிகத் தாராளமான அன்பை அளிக்க உங்களை அர்ப்பணித்து, அதை உங்கள் பரிந்துரை மன்றாட்டாக இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் அன்பின் வழியாக இறைவன் அந்த நபரை நோக்க அனுமதியுங்கள்.
ஆண்டவரே, நான் அன்பு செய்ய வேண்டுமென நீர் விரும்புவதுபோல் அன்பு செய்ய அடிக்கடி தவறிவிடுகிறேன். என்னிடம் தன்னலமும் பிறரைத் தீர்ப்பிடும் மனப்பான்மையும் உள்ளன. என் இதயத்தை மென்மையாக்கி, பின்னர் நான் இதுவரை உணர்ந்ததிலேயே மிகத் தாராளமான அன்பை என் இதயத்தில் வையும். உமது இறை இரக்கம் மிகவும் தேவைப்படுவோரை நோக்கி அந்த அன்பைத் திருப்ப எனக்கு உதவும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
முப்பத்தைந்தாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




