சிந்தனை 309: பிறருடன் உரையாடுதல்
நாம் மற்றொருவருடன் உரையாடும்போதெல்லாம், கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சாதாரண உரையாடலில்கூட அதற்கான வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, மற்றொருவர் தம் வாழ்க்கை விவரங்களைச் சொல்லும்போது கூர்ந்து கேட்பது, அவர்மீது உங்களுக்குள்ள அக்கறையையும் கரிசனையையும் வெளிப்படுத்துகிறது; அவருடைய மாண்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது…