தமிழ்

சிந்தனை 319: தனிமையுணர்வை எதிர்கொள்ளுதல்

தனிமையுணர்வு என்பது பலர் அனுபவிக்கும் ஆழ்ந்த துயரம்.  அது இவ்வளவு வேதனை தருவதற்கான ஒரு காரணம் இதுதான்: தனிமையில் இருப்பவர் தமது வேதனையைத் தணிக்க உதவ யாருமின்றி, அல்லது மிகச் சிலரே உள்ள நிலையில், தனியாகவே துன்புறுகிறார் என்பது வெளிப்படை.  நிலைமை இவ்வாறு இல்லையென்றால், அவர் தனிமையை உணர மாட்டார்.  வியப்புக்குரிய வகையில், மற்றவர்கள் சூழ்ந்திருப்பவர்கள்கூட..

சிந்தனை 222: திணறுவதாக உணர்தல்

ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் திணறுவதாக உணரும் நாட்கள் இருக்கக்கூடும்.  உங்களுக்குப் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால், உங்கள் கடமைகளைச் சரியாகவும் நன்றாகவும் நிறைவேற்ற முடியுமா என்று நீங்கள் கவலைப்படலாம்…

சிந்தனை 189: அச்சத்தை வெல்லுதல்

பல்வேறு காரணங்களால் அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக நேரக்கூடிய ஓர் ஆபத்தை உணரும்போது, ஒருவகைத் தற்காப்புச் செயல்பாடாகத் திடீர் அச்சம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கார் திடீரென நீங்கள் செல்லும் பாதைக்குள் திரும்பி வருவதே அந்த உடனடி ஆபத்து என்றால், இந்த அச்சம் உண்மையிலேயே உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும். திடீர் அச்சம் உங்களை நடவடிக்கை எடுக்க…

சிந்தனை 169: அரசரின் முன்னிலையில் அமைதி

மிகுந்த அதிகாரம் கொண்ட ஒருவரைச் சந்திப்பது உற்சாகத்தை ஏற்படுத்தலாம்.  எடுத்துக்காட்டாக, நீங்கள் பணிபுரிய விரும்பும் ஒரு நிறுவனத்தின் தலைவரைச் சந்திப்பதோ, புகழ்பெற்ற ஒருவரை முதன்முறையாகச் சந்திப்பதோ, ஆயரை அல்லது திருத்தந்தையைச் சந்திப்பதோ ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தலாம்.  ஆனால்…

சிந்தனை 156: ஆண்டவரே நம் அடைக்கலம்

வாழ்வில் சில வேளைகளில் அச்சம் உங்களை ஆட்கொள்கிறது.  மலைக்க வைக்கும் ஒரு பணி உங்கள் முன் இருக்கலாம்; அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு பாதையில் நீங்கள் நடந்துகொண்டிருக்கலாம்.  இவையும் வாழ்வின் இன்னும் பல அனுபவங்களும் அச்சத்திற்கும் கவலைக்கும் காரணமாகலாம்.  அறியாதவற்றைப் பற்றிய அச்சம் ஆட்கொள்ளக்கூடும்…

சிந்தனை 129: அஞ்ச வேண்டாம்

“அஞ்சாதே; விசுவாசம் மட்டும் கொண்டிரு” (மாற்கு 5:36). “அஞ்சாதே” என்னும் இந்த நான்கு சொற்களும் மறைநூல் முழுவதிலும் எண்ணற்ற முறை சொல்லப்படுகின்றன. நாம் அவற்றுக்குச் செவிசாய்க்க வேண்டும். அச்சம் நம்மைச் செயலிழக்கச் செய்து, பலவிதமான அறிவற்ற சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடும். அச்சத்தால் செயல்படுபவர்…

சிந்தனை 111: தீயோனின் பொய்கள்

அலகை நம்மைப் பல வழிகளில் சோதிப்பான். நாம் பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட்ட பாவங்கள் உட்பட, நம் பாவங்களை நமக்கு நினைவூட்டுவது, நம்மைத் தாக்குவதற்கு அலகை விரும்பிப் பயன்படுத்தும் பொதுவான வழிகளில் ஒன்று. நாம் தவறான பாதையில் செல்கிறோம் என்றும், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லை என்றும், பொய்யர்களும் பாவிகளுமாக இருக்கிறோம் என்றும் நம்மை நம்பவைக்க முயல்வதில் அவன் மகிழ்கிறான். மேலும்…

சிந்தனை 44: ஆண்டவரின் பார்வை அச்சத்தை அகற்றுகிறது

நம் ஆண்டவர் இரவும் பகலும் நிறைவான அன்போடும் பாசத்தோடும் உங்களை நோக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதையும், எல்லாச் சூழல்களிலும் உங்களோடு நடக்கிறார் என்பதையும் அறிவீர்களா? இதை நம்புவது கடினமாக இருக்கலாம்; ஏனெனில் நம் காதுகளால் அவரது குரலைக் கேட்கவோ, நம் கண்களால் அவரைக் காணவோ, அல்லது…

சிந்தனை 337: பிறரின் மனக்கவலையைத் தணிக்க உதவுதல்

நம் வாழ்வில் அவ்வப்போது கலக்கமடைந்தவர்களையோ மனமுடைந்தவர்களையோ கவலையில் இருப்பவர்களையோ சந்திப்போம் என்பது ஏறக்குறைய உறுதி. அவர்கள் ஏதாவதொன்றைப் பற்றியே அளவுக்கு மீறிச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம்; அவர்களுடைய சிந்தனை ஓரளவு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக்கூட இருக்கலாம். இரக்கம் காட்டுவதற்கு இது எத்தகைய அருள் நிறைந்த வாய்ப்பு! மனக்கவலை…