தமிழ்

சிந்தனை 173: ஒருவரோடு ஒன்றித்திருப்பது மூவரோடும் ஒன்றித்திருப்பதாகும்

அதிபுனித மூவொரு கடவுள் ஒரே இறை இயல்பைக் கொண்டவராகவும், அதேவேளையில் தனித்துவமுள்ள மூன்று ஆட்களாக இருப்பவராகவும் விவரிக்கப்படுகிறார். இதனால், தனித்துவமுள்ள இந்த மூன்று ஆட்களும் நிறைவான ஒன்றிப்பில் பங்குகொள்கின்றனர். உண்மையில், அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபட்டவர்களாக இல்லாவிட்டால், அவர்கள் “ஒன்றித்திருக்க” முடியாது. ஆகவே, கடவுளைப் பற்றிப் பேசும்போது…

சிந்தனை 93: அன்பும் பாவமும் சந்திக்கும் தருணம்

அன்பும் பாவமும் எங்கே சந்திக்கின்றன?  நம் ஆண்டவருக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலிலும் ஏளனத்திலும் தீய செயல்களிலும் அவை சந்திக்கின்றன.  அவர் நிறைவான அன்பின் அவதாரமாக இருந்தார்.  அவரது இதயத்தில் இருந்த இரக்கம் எல்லையற்றதாக இருந்தது.  மக்கள் அனைவர்மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையும் பரிவும் கற்பனைக்கு எட்டாதவை.  இருந்தும் படைவீரர்கள் அவரை ஏளனம் செய்தனர்…

featured image DM

சிந்தனை 5: உலகின் மீட்பு

இறைவன் மனிதரானதே அதுவரை அறியப்பட்ட இரக்கச் செயல்களிலெல்லாம் மிகப் பெரியது. அதற்குப் பின்னர் அதை விஞ்சிய ஒரே செயல், இயேசு சிலுவையில் இறந்து, தமது இரத்தத்தால் பாவத்தையும் சாவையும் அழித்ததே. சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாக உலகிற்கு வழங்கப்பட்ட மீட்பு, அன்பும் இரக்கமும் நிறைந்த செயலாகும்…

சிந்தனை 4: மனிதராதலும் பிறப்பும்

நித்திய இறைமகன் புனித கன்னி மரியாவின் திருவயிற்றில் மனித உடலை ஏற்றபோது, மனித இயல்பு என்றென்றைக்குமாக மாற்றம் பெற்றது. மனிதகுலத்துடன் தம்மை ஒன்றிணைத்ததன் வழியாக, கடவுள் நமது மாண்பை முற்றிலும் புதியதொரு நிலைக்கு உயர்த்தினார்…