சிந்தனை 310: தீயவனின் மடமை
அலகை உண்மையிலேயே இருக்கிறான்; அவனது சோதனைகளும் உண்மையானவை. அவன் உங்களை முழுமையான வெறுப்புடன் வெறுக்கிறான்; உங்கள் அழிவை விரும்புகிறான். இதை அறிந்திருப்பது நல்லது. ஆனால் தீயவன் மிகவும் தந்திரமானவனாகவும், பிறரைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பவனாகவும் இருக்கிறான். அப்பட்டமான பொய்களால் உங்களை நம்பவைப்பது பெரும்பாலும் இயலாது என்பதை அவன் அறிந்திருப்பதால், அவ்வாறு உங்களிடம் பேசுவது அரிது…