தமிழ்

சிந்தனை 115: கடவுளின் திருவுளம் உங்களைப் பாதுகாக்கும்

கடவுளின் திருவுளம் என்பது, உங்கள் எதிர்காலத்திற்காக அவர் வகுத்துள்ள திட்டத்தைவிட மிக மேலானது.  உங்களைக் குறித்து அவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும்விட மேலானது.  அவரது திருவுளமே நீங்கள் புனிதமடைவதற்கான பாதை; அதுவே மிகுந்த ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று.  அவரது திருவுளம் செயலாற்றுவதாகவும் செயலாற்றாததாகவும் (அனுமதிப்பதாகவும்) உள்ளது.  அது…

சிந்தனை 111: தீயோனின் பொய்கள்

அலகை நம்மைப் பல வழிகளில் சோதிப்பான். நாம் பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட்ட பாவங்கள் உட்பட, நம் பாவங்களை நமக்கு நினைவூட்டுவது, நம்மைத் தாக்குவதற்கு அலகை விரும்பிப் பயன்படுத்தும் பொதுவான வழிகளில் ஒன்று. நாம் தவறான பாதையில் செல்கிறோம் என்றும், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லை என்றும், பொய்யர்களும் பாவிகளுமாக இருக்கிறோம் என்றும் நம்மை நம்பவைக்க முயல்வதில் அவன் மகிழ்கிறான். மேலும்…

சிந்தனை 94: தீயவனை எதிர்கொள்ளுதல்

தீயவனின் கடுமையான வெறுப்பைத் தவிர்க்க நீங்கள் விரும்பினால், புனித வாழ்வுக்காக முயல்வதை விட்டுவிடுங்கள்.  சாத்தான் அப்போதும் உங்களை வெறுப்பான்; ஆனால் ஒரு புனிதரை வெறுக்கும் அளவுக்கு உங்களை வெறுக்கமாட்டான்.  ஆனால், இது நிச்சயமாக அறிவீனமே!  வெறுப்பைத் தவிர்ப்பதற்காக ஒருவர் ஏன் புனித வாழ்வைத் தவிர்க்க வேண்டும்…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…

சிந்தனை 360: ஆன்மிகப் போராட்டம்

சோதிப்பவனாகிய சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான்; ஆனால் அவனுக்கு அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அவனுக்குச் சிறிதும் கவனம் செலுத்தக் கூடாது. அவனது எண்ணங்களோடு வாதாடக் கூடாது. அவனோடு பேரம் பேசக் கூடாது. சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் துணிவும், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கையும், எதிர்நோக்கும் இருக்க வேண்டும். ஆகிவிடாதீர்கள்…