தமிழ்

சிந்தனை 290: மீட்புப் பெற்ற உடல் துன்பங்கள்

பலர் மிகச் சிறந்த உடல்நலத்துடன் வாழ்கின்றனர்; வேறு சிலருக்கு அவ்வாறு அமைவதில்லை.  சிலர் உடல் நலிவு அல்லது முதுமை காரணமாக வாழ்வில் மிகுந்த உடல் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர்.  இந்த உடல் அசௌகரியங்களைக் குறைப்பதற்குப் பலர் வழிகளைத் தேடினாலும், இந்த வலிகள் அருளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கின்றன என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.  முதலில்…

சிந்தனை 275: சலிப்பூட்டும் அன்றாட நாட்களின் மாட்சி

முதலில் எண்ணிப் பார்க்கும்போது, “சலிப்பூட்டுவது”, “மாட்சி” ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று முரணாகப் பயன்படுத்தினாலன்றி, அவை இணைந்து வரக்கூடியவையாகத் தோன்றாது.  ஆனால் கடவுளின் சிந்தனையில் இவ்விரு சொற்களும் ஒன்றோடொன்று மணமுடித்துள்ளன.  சலிப்பூட்டும் நமது அன்றாடக் கடமைகளின் வழியாகவே கடவுளை மாட்சிப்படுத்தவும் புனிதத்தை அடையவும் நம்மால் முடியும் என்ற பொருளில் அவை “மணமுடித்துள்ளன”.  இது…

சிந்தனை 268: மரணத்தைப் பற்றிச் சிந்தித்தல்

உங்கள் மரணத்தைப் பற்றி நினைப்பது அச்சமூட்டுவதாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் அதைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆனால், ஒருவர் தமது மரணத்தை நேரடியாகவும் முழு நம்பிக்கையுடனும் நோக்க முடிவது ஓர் அருளாகும். உங்கள் வாழ்வு சீராக இருந்தால் மட்டுமே இவ்வாறு முழு நம்பிக்கையுடன் நோக்க முடியும்…

சிந்தனை 258: கடவுளின் நெருக்கம்

கடவுள் எங்கே இருக்கிறார்?  கடவுள் விண்ணகத்திலோ தொலைதூர இடமொன்றிலோ இருந்துகொண்டு, நம்மைக் கண்ணோக்கி, தமது திருவுளத்திற்கு ஏற்ப படைப்பனைத்தையும் வழிநடத்துகிறார் என்று எண்ணுவது எளிது.  இது உண்மைதான்; ஆனால் இதுவே முழுமையான கண்ணோட்டம் அல்ல.  கடவுள் நம்மையும் படைக்கப்பட்ட உலகையும் வெகுவாகக் கடந்தவர் என்பதால், அவர் முற்றிலும் “அனைத்தையும் கடந்தவர்” ஆவார்.  ஆனால் அவர்…

சிந்தனை 257: கடவுளின் நீண்டகாலத் திட்டம்

நம் ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடு பணிபுரிய நீங்கள் நாடும்போது, ஒவ்வொரு நாளும் தமது திருவுளத்தைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவதை உணரலாம். அது முற்றிலும் தெளிவாக இல்லாவிட்டாலும், உங்களிடமிருந்து அவர் இதை அல்லது அதை விரும்புகிறார் என்ற ஓர் உணர்வு உங்களுக்கு இருக்கலாம். கடவுள் உங்கள் வாழ்வுக்காக வைத்திருக்கும் திட்டத்தைப் பொதுவாக உங்களுக்கு முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை…

சிந்தனை 253: முழுமையான நன்றியுணர்வின் மறுமொழி

கடவுளுக்கு நாம் அளிக்கும் மறுமொழி எவ்வாறு இருக்க வேண்டும்?  கடவுளுடனான நம் உறவில், பல வேளைகளில் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிவிடுகிறோம்.  நம் துன்பங்களிலும் தேவைகளிலுமே கவனம் செலுத்துகிறோம்.  இவற்றைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, இவற்றைப் பற்றிய பிடிப்பை விட்டுவிட வேண்டும்.  இவ்வாறு செய்யும்போது, மாட்சியையும் நன்மைத்தனத்தையும் நாம் காணத் தொடங்குவதை உணர்வோம்…

சிந்தனை 242: தனித்துவமாக ஒளிரும் உண்மையான அழகு

“அழகு” என்பது காண்பவரின் கண்களில் உள்ளது என்று சொல்லப்படுவதுண்டு.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அழகு என்பதன் வரையறை அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது என்று சிலர் கூறுகின்றனர்.  மேலோட்டமான நிலையில் இதில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்றாலும், ஒரு…

சிந்தனை 239: இரக்கத்தின் முத்திரை

ஒவ்வொரு மாபெரும் புனிதரும் கடவுளின் நன்மைத்தனத்தின் ஏதோ ஓர் அம்சத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிலர் உலகச் செல்வங்களின்மீது சிறிதும் பற்றின்றி வாழ்கிறார்கள்; சிலர் தளராத அர்ப்பணிப்புடன் ஏழைகளுக்குப் பணிபுரிகிறார்கள்; சிலர் ஆழ்ந்த செப வாழ்வு வாழ்கிறார்கள்; சிலர் மறைஞான வெளிப்பாடுகளைப் பெறுகிறார்கள்; சிலர் பல தொகுதிகளாக எழுதுகிறார்கள்…

சிந்தனை 238: இருளான காலங்களில் பிரமாணிக்கம்

புனித ஃபவுஸ்தீனாவும் பிற மாபெரும் புனிதர்கள் பலரும், சிலுவை புனித யோவான் “ஆன்மாவின் இருண்ட இரவு” என்றும் “ஆவியின் இருண்ட இரவு” என்றும் வரையறுத்த ஒரு தனித்துவமான ஆன்மிக இருளுக்குள் நுழைந்திருந்தாலும், நாம் அனைவரும் ஏதோ ஒரு வடிவிலோ அல்லது…

சிந்தனை 210: இறையன்பின் ஒளியில் நற்செயல்கள்

நீங்கள் கடினமாக உழைக்கிறீர்களா? நல்லவராக இருக்க முயல்கிறீர்களா? நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? நல்லவராக இருக்க முயல்வது நிச்சயமாக நல்லதே. ஆனால் அவ்வாறு முயலும்போது, இறையன்பே நம் செயல்களின் ஊற்றாக மாறியிருந்தாலன்றி, நமது “நன்மைத்தனம்” கடவுளின் பார்வையில் உண்மையிலேயே நல்லது என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது…