“திருப்பலியில் உதவும் ஃபிரிடோலின்” — ஓவியர்: பீட்டர் ஃபெண்டி
இரக்கம் பல வழிகளில் வழங்கப்படுகிறது. இரக்கம் கிடைக்கும் பல வழிகளுள், கடவுளின் புனித குருக்கள் வழியாக அதை நாடுங்கள். அவருடைய குரு நீங்கள் சொல்வதைக் கேட்கவும், உங்களிடம் பேசவும், உங்களை வழிநடத்தவும் இடமளியுங்கள். குருக்கள் பலவீனமானவர்கள்; பாவிகளும்கூட. ஆயினும், அவர்களுடைய பலவீனத்தில் ஆன்மாக்களை வழிநடத்த அவர்களுக்குச் சிறப்பு அருள் வழங்கப்படுகிறது. நம் உலகில் இரக்கம் வெளிப்படையாகக் கிடைக்கும் வழிகளுள் குருத்துவம் முக்கியமான ஒன்றாகும். குருக்களுக்காகச் செபியுங்கள்; அவர்கள் வழியாகக் கடவுள் உங்களிடம் பேச இடமளியுங்கள் (காண்க நாட்குறிப்பு #12).
உங்கள் வாழ்வில் கடவுள் தந்துள்ள குருக்களை நினைவுகூருங்கள். அவர்களுக்காகச் செபியுங்கள்; அவர்களுக்கு உறுதுணையாயிருந்து, அவர்களை ஊக்குவியுங்கள். அதேவேளையில், அவர்கள் வழியாகக் கடவுள் தமது இரக்கத்தை உங்கள்மீது பொழியும் வழிகளையும் ஏற்க மனம் திறந்திருங்கள். காணக் கண்களும் கேட்கச் செவிகளும் உங்களுக்கு இருந்தால் போதும்; அவர்கள் வழியாக எண்ணற்ற வழிகளில் கடவுள் உங்களிடம் வருகிறார்.
ஆண்டவரே, இன்று எல்லாக் குருக்களுக்காகவும் நான் செபிக்கிறேன். உம் புதல்வர்கள் தாங்கள் செய்யும் அனைத்திலும் புனிதமடைந்து ஒளிவீசுவார்களாக. அவர்களுடைய பாவங்களை மன்னித்து, நற்பண்புகளால் அவர்களை நிரப்பும். அவர்கள் உமது வார்த்தையை அறிவிக்கவும், பிரமாணிக்கத்தோடும் ஆர்வத்தோடும் உமது இரக்கத்தை வழங்கவும் உதவியருளும். ஆண்டவரே, திருக்குருத்துவம் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வாழ்வுக்காக ஒன்பது நாள் நவநாள் செபம்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




