Jebulon, Wikimedia Commons வழியாக
நம் தெய்வீக ஆண்டவரை நீங்கள் உண்மையாகவே தேடியிருந்தால், தமது இதயத்திலும் புனித திருவுளத்திலும் உங்களை ஏற்றுக்கொள்வாரா என்று அவரிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டுவிட்டு, அவர் சொல்வதைக் கேளுங்கள். அனைத்தையும் ஒப்படைத்து, உங்களையே அவருக்கு அர்ப்பணித்திருந்தால், உங்களை ஏற்றுக்கொள்வதாக அவர் உங்களுக்குப் பதிலளிப்பார். நீங்கள் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்கள் வாழ்வு மாறும். ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அது மாறாமல் இருக்கலாம்; ஆனால் நீங்கள் நம்பியிருக்கவோ எதிர்பார்த்திருக்கவோ முடிந்ததைவிட மேலான விதத்தில் அது நன்மைக்காக மாறும் (காண்க: நாட்குறிப்பு #14).
இன்று மூன்று விஷயங்களைச் சிந்தித்துப் பாருங்கள்: 1) நீங்கள் முழு இதயத்தோடும் இயேசுவைத் தேடுகிறீர்களா? 2) உங்களை முழுமையாக ஒப்படைப்பதன் வழியாக, உங்கள் வாழ்வை எந்தத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு இயேசுவிடம் கேட்டிருக்கிறீர்களா? 3) உங்களை அன்புசெய்வதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் இயேசு உங்களிடம் கூறுவதைக் கேட்க உங்களையே அனுமதித்திருக்கிறீர்களா? இந்த எளிய படிகளைப் பின்பற்றி, இரக்கத்தின் ஆண்டவர் உங்கள் வாழ்வைப் பொறுப்பேற்று வழிநடத்த இடமளியுங்கள்.
ஆண்டவரே, நான் உண்மையாகவே என் முழு இதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன். உம்மைக் கண்டடையவும், உமது மிகப் புனிதமான திருவுளத்தை அறிந்துகொள்ளவும் எனக்கு உதவியருளும். ஆண்டவரே, நான் உம்மைக் கண்டடையும்போது, முழுமையாக உமக்கே உரியவனாக இருக்கும்படி, இரக்கமுள்ள உமது இதயத்தின்பால் நீர் என்னை ஈர்த்துக்கொள்ள இடமளிக்கவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
வாழ்வுக்காக ஒன்பது நாள் நவநாள் செபம்
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




