தமிழ்

சிந்தனை 30: கடவுளுக்குக் கீழ்ப்படிதல்

“சொர்க்கத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்படுதல்” பெஞ்சமின் வெஸ்ட் படைப்பு

காணொளி

புனித வாழ்வுக்கு ஒரு திறவுகோல் கீழ்ப்படிதல். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையால் அருள்நிலையை இழந்தனர்; கீழ்ப்படிதலால் நாம் மீண்டும் அருள்நிலைக்குக் கொண்டுவரப்படுகிறோம். கீழ்ப்படிதல் கடினமாக இருக்கலாம்; அதற்கு ஆழமான உள்ளார்ந்த முடிவு தேவை. இயேசுவுக்குக் கீழ்ப்படிவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள், குறிப்பாக அவ்வாறு செய்ய உங்களுக்கு மனமில்லாத வேளைகளில். அவை மிகுந்த அருளுக்கும் மனமாற்றத்திற்கும் உரிய தருணங்கள் (காண்க நாட்குறிப்பு #28).

இன்று தாழ்ச்சியுடன் வாழ முயலுங்கள். தாழ்ச்சியின் வழியாக மட்டுமே கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கும் ஆணவத்தை நம்மால் காண முடியும். ஆணவம் நம் பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருக்கவும், கடவுளின் நிறைவான இரக்கத்திற்குத் திறந்த மனத்துடன் இருக்க மறுக்கவும் வழிவகுக்கிறது. நம் ஆண்டவரும் அவருடைய புனித அன்னையும் அனைத்திலும் தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததை நீங்களும் பின்பற்றும்படி, உங்கள் பாவத்தைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதையும், அந்தப் பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கான உங்கள் விருப்பத்தையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆண்டவரே, உமது இறை இரக்கத்தின் முன் என்னையே தாழ்த்திக்கொள்ள எனக்கு உதவியருளும். அந்தத் தாழ்ச்சியில், என் பாவத்தை மட்டுமல்லாமல், நீர் என்னை வாழ அழைக்கும் அருள் நிறைந்த மாட்சிமையான வாழ்வில் நுழையும்படி நீர் பொழியும் அருளையும் இரக்கத்தையும் காண எனக்கு உதவியருளும். உமது அன்பின் நிறைவான கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படிந்து, உமது இரக்கத்தால் நிரப்பப்படுவேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்