செல்வரும் ஏழை இலாசரும் — ஓவியர்: ஹென்றிக் தெர் புரூகன்
பல நேரங்களில் நம்மைப் பற்றியும் நமது பிரச்சினைகளைப் பற்றியுமே நாம் ஆழ்ந்திருப்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின், குறிப்பாக நமது குடும்பத்தினரின் போராட்டங்களையும் தேவைகளையும் காணத் தவறிவிடுகிறோம். சில வேளைகளில், நம்மைப் பற்றியே நாம் மூழ்கியிருப்பதால், நாம் அன்புகாட்டிப் பராமரிக்க அழைக்கப்பட்டவர்கள்மீது தேவையற்ற சுமைகளைச் சேர்த்துவிடும் ஆபத்து உள்ளது. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கிறிஸ்துவைப் போன்ற உண்மையான ஒத்துணர்வையும் இரக்கத்தையும் நமது இதயங்களில் வளர்த்துக்கொள்ள வேண்டும் (காண்க: நாட்குறிப்பு #117).
உங்கள் வாழ்வில் இடம்பெறும் மனிதர்களின் தேவைகளைக் காண்கிறீர்களா? அவர்களுடைய மனக்காயங்களையும் சுமைகளையும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் சோகத்திலும் தாங்க முடியாத நெருக்கடியிலும் இருக்கும்போது அதை உணர்கிறீர்களா? அவர்களுடைய துயரத்தை அதிகரிக்கிறீர்களா, அல்லது அவர்களைத் தூக்கி நிறுத்த முயல்கிறீர்களா? ஒத்துணர்வும் இரக்கமும் நிறைந்த இதயம் என்னும் மாபெரும் கொடையைப் பற்றி இன்று சிந்தியுங்கள். உண்மையான கிறிஸ்தவ ஒத்துணர்வு என்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் மனித நேயத்துடன் அளிக்கும் அன்பின் மறுமொழியாகும். நமது பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய இரக்கச் செயல் இது.
ஆண்டவரே, உண்மையான ஒத்துணர்வு நிறைந்த இதயத்தைக் கொண்டிருக்க எனக்கு உதவியருளும். என்னைச் சுற்றியுள்ளவர்களின் போராட்டங்களையும் தேவைகளையும் உணரவும், என்மீதே பதிந்திருக்கும் என் பார்வையை அவர்களுடைய தேவைகளின் பக்கம் திருப்பவும் எனக்கு உதவியருளும். ஆண்டவரே, நீர் இரக்கம் நிறைந்தவர். நானும் அனைவரிடமும் இரக்கம் நிறைந்தவனாக இருக்க உதவியருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




