டான் ஹட்சன் உருவாக்கிய குழந்தையின் முதல் செபம், உரிமம்: CC0 பொதுவுடைமை, publicdomainpictures.net வழியாக
பிறரிடம் பேசும்போது, கடவுளின் அன்பும் இரக்கமும் நம் உதடுகளிலிருந்து பொழிய வேண்டும். ஆனால் எப்படி? நமது பேச்சு எவ்வாறு இருக்க வேண்டும்? நாம் கடவுளிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதன் ஒளியில், பிறரிடம் பேசும் விதத்தை ஆராய்வது ஒரு வழியாகும். கடவுளிடம் பேசும்போது நாம் நேர்மையுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் பேச வேண்டும். கள்ளமற்ற உள்ளத்துடன் கடவுளிடம் செபிக்கும் ஒரு குழந்தையை நினைத்துப் பாருங்கள். இந்தத் தூய ஆன்மாவில் இப்பண்புகள் நன்கு வெளிப்படுகின்றன. நாமும் அவ்வாறே இருக்க வேண்டும். இப்பண்புகளுடன் நாம் கடவுளிடம் பேசினால், பிறரிடம் பேசும்போதும் இவை நமக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் (காண்க நாட்குறிப்பு #215).
நீங்கள் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களுடன் நிகழ்த்தும் உரையாடல்களையும் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் செருக்குடனோ ஏளனமாகவோ பேசுகிறீர்களா? புறணி பேசுவதையோ கவனக்குறைவாகப் பேசுவதையோ தவிர்க்கப் போராடுகிறீர்களா? உங்கள் பேச்சு நேர்மையும் எளிமையும் தாழ்ச்சியும் கடவுளின் அருளில் நம்பிக்கையும் கொண்டதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள். இப்பண்புகளால் வழிநடத்தப்படும் ஒவ்வோர் உரையாடலிலும் மகிழ்ச்சி இருக்கும்.
ஆண்டவரே, இரக்கமும் பரிவும் நிறைந்த இதயத்துடன் பேச எனக்கு உதவியருளும். தீய எண்ணத்துடனும் கடுமையாகவும் பேசாதவாறு என் நாவைக் காத்துக்கொள்ள எனக்கு உதவியருளும். கடந்த காலத்தில் நான் விவேகமின்றிப் பேசியவற்றிற்காக என்னை மன்னித்தருளும்; தாராளமும் இரக்கமும் நிறைந்த உமது இதயத்தின் குரலாக நான் பிறருக்கு விளங்க எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பதின்மூன்றாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்
மார்ச் 4 – புனித கசிமீர்—விருப்ப நினைவு
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





