ஜியோர்க் ஃப்ரீட்ரிக் ஸ்டெட்னர் († 1639) என்பவருடையதாகக் கருதப்படும் படைப்பு, Wikimedia Commons வழியாக
காணொளி
சிறு தியாகங்கள் முக்கியமானவையா? சில வேளைகளில், பெரிய செயல்களைச் செய்ய நாம் முயல வேண்டும் என்று நினைக்கலாம். சிலர் பிரம்மாண்டமான எண்ணங்களுடன், பெரும் சாதனைகளைப் புரியக் கனவு காணலாம். ஆனால், நாம் அன்றாடம் ஒரே மாதிரியாகச் செய்துவரும் சிறு தியாகங்கள் பற்றி என்ன சொல்வது? சுத்தம் செய்வது, சமைப்பது, பிறருக்கு உதவுவது, மன்னிப்பது போன்ற தியாகங்கள் பற்றி என்ன சொல்வது? சிறிய செயல்கள் முக்கியமானவையா? நிச்சயமாக. அவை நாம் கடவுளுக்கு அளிக்கும் ஒப்பற்ற பொக்கிஷம். அன்றாடச் சிறு தியாகங்கள், திறந்த பள்ளத்தாக்கில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை அழகிய காட்டுமலர்கள் நிறைந்த ஒரு மலர்வெளியைப் போன்றவை. ஒரு மலரே அழகானதுதான்; ஆனால், ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் இந்தச் சிறிய அன்புச் செயல்களில் நம்மை அர்ப்பணிக்கும்போது, முடிவில்லா அழகும் பொலிவும் அலைபாயும் ஒரு மலர்வெளியைக் கடவுளுக்கு அளிக்கிறோம் (காண்க: நாட்குறிப்பு #208).
இன்று சிறிய செயல்களைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் அன்றாடம் செய்யும் எந்தச் செயல்கள் உங்களுக்குச் சோர்வைத் தருகின்றன, சலிப்பூட்டுவனவாகவோ முக்கியமற்றவையாகவோ தோன்றுகின்றன? ஒருவேளை மற்ற எல்லாச் செயல்களையும்விட இச்செயல்களே, கடவுளை மிகச் சிறப்பாகப் போற்றி மாட்சிப்படுத்துவதற்கான மகத்தான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
ஆண்டவரே, எனது இந்நாளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நான் செய்வதனைத்தையும், என்னையே முழுமையாகவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். குறிப்பாக, நான் அன்றாடம் செய்யும் சிறிய செயல்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என் நாள் முழுவதும் உமக்கு மாட்சியும் புகழும் அளிக்கும் வகையில், ஒவ்வொரு செயலும் உமக்குரிய கொடையாக மாறட்டும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பன்னிரண்டாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
மார்ச் 3 – புனித கத்தரின் டிரெக்சல், கன்னி
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





