தமிழ்

சிந்தனை 86: மிகக் கடினமான இதயங்களையும் உருகச் செய்தல்

படம்: கெர்ட் ஆல்ட்மான் — Pixabay

காணொளி

ஒரு பெரிய பனிக்கட்டியை கற்பனை செய்துகொள்ளுங்கள்.  இப்போது அந்தப் பனிக்கட்டியின் நடுவில் விலைமதிப்புமிக்க ஒரு நாணயம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  அந்த நாணயத்தைப் பெற வேண்டுமானால், பனிக்கட்டி உருக வேண்டும்.  நம் இதயங்களும் இப்படித்தான் இருக்கலாம்.  சிலருடைய இதயங்கள் காலப்போக்கில் மிகவும் கடினமாகிவிட்டதால், அவற்றை உருகச் செய்து, அந்த நபரின் உண்மையான மதிப்பையும் மாண்பையும் வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதுபோல் தோன்றுகிறது.  ஆனால் இயேசு ஒளிமிக்க கதிரவன்; அவரது கதிர்கள் மிகுந்த வலிமையுடன் ஒளிர்கின்றன.  அவரது தொடர்ந்த உடனிருப்பில், மிகக் கடினமான இதயங்கள்கூட உருகிவிடும் (காண்க நாட்குறிப்பு #370).

ஒருவர் தொடர்ந்து கடின இதயத்துடன் இருப்பதால், அவரைப் பற்றிய நம்பிக்கையை நீங்கள் கைவிட்டுவிட்டீர்களா?  ஆண்டுகள் கடந்தும் மாறுவதற்கு விருப்பமில்லாதவராகத் தோன்றும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?  நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.  கடவுளின் அருளும் இரக்கமும் ஒளிர்ந்து வெளிப்படும் ஒரு முப்பட்டகமாக நீங்கள் தொடர்ந்து செயல்பட்டால், மிகக் கடினமான இதயத்தைக்கூட அவை தொட முடியும் என்பதை அறிந்திருங்கள்.

ஆண்டவரே, தங்கள் பாவங்களில் மிகவும் கடினப்பட்டுப் போயிருப்பவர்களுக்காக இன்று நான் வேண்டுகிறேன்.  அனைவரின் இதயங்களையும் நீர் அறிவீர்; அனைவரின் மனங்களையும் நீர் அறிவீர்.  உமது இறை இரக்கம் மிகவும் தேவைப்படுவோரிடம் என்னை வழிநடத்தி, மாட்சிமையும் இதமும் நிறைந்த உமது அருள் பாயும் வாய்க்காலாக என்னைப் பயன்படுத்தும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

முப்பத்துமூன்றாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்

தவக்காலத்திற்கான வளங்கள்

தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்