படம்: pxfuel.com வழியாக
காணொளி
உங்களால் எப்போதும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! எல்லாவற்றிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனுக்கு முழுமையாக “ஆம்” என்று சொல்லும் முடிவை உங்களால் எளிதாக எடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உண்மையில் உங்களால் முடியும். இந்த முழுமையான முடிவை நீங்கள் எடுக்கத் தடையாக இருப்பது உங்களுடைய பிடிவாதமான சுயவிருப்பம் மட்டுமே (காண்க: நாட்குறிப்பு #374).
நாம் பிடிவாதமுள்ளவர்களாகவும் சுயவிருப்பம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். நம் சொந்த விருப்பத்தை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக எல்லாவற்றிலும் இறைவனின் திருவுளத்தைத் தேர்ந்தெடுப்பது கடினம். அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இதையே நமது உறுதியான தீர்மானமாகக் கொள்ள வேண்டும். நாம் தவறும்போது, மீண்டும் உறுதிகொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் ஒருபோதும் சோர்ந்துவிடாதீர்கள். உங்கள் விடாமுயற்சி நம் ஆண்டவரின் இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆண்டவரே, எல்லாவற்றிலும் உமது தெய்வீகத் திருவுளத்தை ஏற்றுக்கொள்ள நான் உண்மையாகவே விரும்புகிறேன். எனது சுயநல விருப்பத்திலிருந்து விடுபட்டு, எல்லாவற்றிலும் உம்மை மட்டுமே தேர்ந்தெடுக்க எனக்கு உதவியருளும். உமது கரங்களில் என்னை முழுமையாக ஒப்படைக்கிறேன். நான் விழும்போது, மனச்சோர்வுக்கு இடங்கொடுக்காமல் மீண்டும் எழுந்துநிற்க எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
முப்பத்து நான்காம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




