ஜார்ஜ் த லா தூர் வரைந்த தச்சரான புனித சூசையப்பர்
காணொளி
பல வேளைகளில், நம் நாட்கள் வேலைகளால் நிறைந்திருக்கின்றன. குடும்பங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிகழ்வில் ஈடுபட்டிருக்கின்றன. வீட்டு அலுவல்களும் பிற வேலைகளும் குவிந்துவிடலாம்; நாளின் முடிவில், தனிமையில் இறைவனிடம் செபிக்க நமக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்திருப்பதை நாம் உணரலாம். ஆனால் பரபரப்பான நம் நாளின் பல்வேறு நேரங்களிலும் தனிமையும் செபமும் சாத்தியமாகலாம். நம் முழுக் கவனத்தையும் இறைவனுக்குச் செலுத்தி, அவரோடு தனித்திருக்கக்கூடிய தருணங்களைத் தேடுவது முக்கியம் என்றாலும், பரபரப்பான நம் வாழ்வின் நடுவிலும் உள்ளத்தில் செபிப்பதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும் (காண்க நாட்குறிப்பு #401).
உங்கள் வாழ்க்கை வேலைகளால் நிறைந்திருப்பதாக உணர்கிறீர்களா? தனியே சென்று செபிக்க முடியாத அளவுக்கு அடிக்கடி வேலைப்பளுவில் இருப்பதாக உணர்கிறீர்களா? இது சிறந்த நிலை அல்ல என்றாலும், உங்கள் பரபரப்பான வாழ்வின் நடுவே வாய்ப்புகளைத் தேடுவதன் மூலம் இதற்குத் தீர்வு காணலாம். பள்ளி நிகழ்ச்சியில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டும்போதும், சமைக்கும்போதும் அல்லது சுத்தம் செய்யும்போதும், நம் மனங்களையும் இதயங்களையும் செபத்தில் இறைவனை நோக்கி உயர்த்த நமக்கு எப்போதும் வாய்ப்பு உள்ளது. நாளின் பெரும்பாலான தருணங்களில் உங்களால் செபிக்க முடியும் என்பதை இன்று உங்களுக்கு நினைவூட்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு தொடர்ந்து செபிப்பது, உங்களுக்கு மிகவும் இன்றியமையாத தனிமையை அளிக்கக்கூடும்.
ஆண்டவரே, நாள் முழுவதும் உமது முன்னிலையில் இருக்க ஏங்குகிறேன். எப்போதும் உம்மைக் காணவும் உம்மை அன்புசெய்யவும் ஏங்குகிறேன். நான் எப்போதும் உம்மோடு இருக்கும்படி, என் வேலைகளின் நடுவிலும் உம்மிடம் செபிக்க எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
ஏப்ரல் 2 – பெரிய வியாழன், ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
முப்பத்தெட்டாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாட்கள் & சிலுவையடியில் 40 நாட்கள்
புனித வாரத்திற்கான மேலும் சில பதிவுகள்
பெரிய வியாழனுக்கான செபத் தியானம்
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




