தமிழ்

சிந்தனை 91: பிறருக்காகச் செபிப்பது கதவைத் திறக்கிறது

செபத்தில் புனித பேதுரு — ஓவியர்: மத்தியாஸ் ஸ்டோம்

காணொளி

மற்றொருவருக்கு உண்மையில் என்ன தேவை என்பதைக் கடவுள் மட்டுமே அறிவார்.  கடவுள் இந்தச் சிறப்பு அருளை நமக்குக் கொடுத்தாலன்றி, மற்றொருவரின் ஆன்மாவை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.  ஆனால், பிறருக்காக உருக்கமாகச் செபிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  சில வேளைகளில், நாம் திறந்த மனத்துடன் இருந்தால், மற்றொருவருக்காக உருக்கமாகச் செபிக்க வேண்டிய தேவையைக் கடவுள் நம் உள்ளத்தில் பதிப்பார்.  மற்றொருவருக்காகச் சிறப்பாகச் செபிக்க அழைக்கப்படுவதாக நாம் உணர்ந்தால், அவருக்கு மிகவும் தேவையான ஒரு புனிதமான, மனந்திறந்த உரையாடலுக்கான கதவைக் கடவுள் திடீரெனத் திறப்பதைக் கண்டு நாம் வியப்படையக்கூடும் (காண்க: நாட்குறிப்பு #396).

கடவுள் ஒரு குறிப்பிட்ட நபரை உங்கள் உள்ளத்தில் பதித்திருக்கிறாரா?  ஒரு குறிப்பிட்ட நபர் அடிக்கடி உங்கள் நினைவுக்கு வருகிறாரா?  அப்படியானால், அவருக்காகச் செபியுங்கள். கடவுளின் திருவுளமானால், அவருக்குத் துணையாக இருக்க நீங்கள் தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருப்பதாகக் கடவுளிடம் சொல்லுங்கள்.  பின்னர் காத்திருந்து, இன்னும் செபியுங்கள்.  கடவுள் விரும்பினால், சரியான நேரத்திலும் சரியான இடத்திலும், அவரை ஏற்றுக்கொள்ளும் உங்கள் திறந்த மனம் நித்தியத்திற்கும் நிலைக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஆண்டவரே, உருக்கமாகச் செபிக்கும் இதயத்தை எனக்குத் தாரும்.  என் வாழ்வுப் பாதையில் நீர் கொண்டுவருபவர்களைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும்.  தேவையில் இருப்போருக்காக நான் செபிக்கும்போது, உமது திருவுளப்படி என்னைப் பயன்படுத்திக்கொள்ள உமக்கு என்னையே கையளிக்கிறேன்.  இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.

முப்பத்தேழாம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்