தமிழ்

சிந்தனை 94: தீயவனை எதிர்கொள்ளுதல்

அலகையால் சோதிக்கப்படும் கிறிஸ்து — ஜான் ரிட்டோ பென்னிமன் வரைந்த ஓவியம்

காணொளி

தீயவனின் கடுமையான வெறுப்பைத் தவிர்க்க நீங்கள் விரும்பினால், புனித வாழ்வுக்காக முயல்வதை விட்டுவிடுங்கள்.  சாத்தான் அப்போதும் உங்களை வெறுப்பான்; ஆனால் ஒரு புனிதரை வெறுக்கும் அளவுக்கு உங்களை வெறுக்கமாட்டான்.  ஆனால், இது நிச்சயமாக அறிவீனமே!  தீயவனின் வெறுப்பைத் தவிர்ப்பதற்காக ஒருவர் ஏன் புனித வாழ்வைத் தவிர்க்க வேண்டும்?  நாம் கடவுளை நெருங்க நெருங்க, தீயவன் நம்மை அழிக்க இன்னும் அதிகமாக முயல்வான் என்பது உண்மை.  இதை அறிந்திருப்பது நல்லதே என்றாலும், இதற்காக அஞ்ச வேண்டியதில்லை.  உண்மையில், தீயவனிடமிருந்து வரும் தாக்குதல்களை, நாம் கடவுளுக்கு நெருக்கமாக இருப்பதன் அடையாளங்களாகக் காண வேண்டும் (காண்க நாட்குறிப்பு #412).

அச்சம் உங்களை ஆட்கொண்டதாக நீங்கள் உணர்ந்த தருணங்களை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  பல வேளைகளில், தீயவனின் வஞ்சகமும் தீய நோக்கமும் உங்களைப் பாதிக்க நீங்கள் இடமளிப்பதன் விளைவே இந்த அச்சம்.  அச்சம் உங்களைப் பாதிக்க விடுவதற்குப் பதிலாக, நீங்கள் எதிர்கொள்ளும் தீமை, கடவுள்மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும் நம்பிக்கையும் வளர்வதற்குக் காரணமாக அமையட்டும்.  தீமை நம்மை வீழ்த்திவிடலாம்; அல்லது கடவுளின் அருளிலும் வல்லமையிலும் நாம் வளர்வதற்கான வாய்ப்பாக அமையலாம்.

ஆண்டவரே, அச்சம் பயனற்றது; தேவையானது விசுவாசமே.  தீயவனின் தாக்குதல்களால் ஏற்படும் அச்சத்தின் கட்டுப்பாட்டில் அல்லாமல், உமது மென்மையான தூண்டுதல்களின் வழிநடத்துதலில் நான் ஒவ்வொரு நாளும் வாழும்படி, என் விசுவாசத்தை வளர்த்தருள வேண்டுகிறேன்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

நாற்பதாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

இரண்டாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம்

புனித வாரத்திற்கான மேலும் சில பதிவுகள்

புனித சனிக்கான செபத் தியானம்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்