மங்கள வார்த்தை அறிவிப்பு, ஓவியர்: லூக்கா ஜோர்தானோ
அடிப்படையிலிருந்து ஒரு ராக்கெட் விண்கலத்தை உருவாக்குமாறு உங்களிடம் கேட்டால், இந்தத் துறையில் உங்களுக்குத் திறமை இல்லை என்றும், ஆகவே உங்களிடம் கேட்கப்படுவதை உங்களால் செய்ய முடியாது என்றும் கூறி நீங்கள் மறுக்கலாம். கடவுளின் திருவுளத்தைப் பொறுத்தவரையில், நாமும் அடிக்கடி அவரிடம் இவ்வாறே பதிலளிக்கிறோம். நம் ஆண்டவர் நம்மிடம் அளவுக்கு அதிகமாகக் கேட்பதாக நாம் எளிதில் உணரக்கூடும். ஆனால் இது அறிவற்ற சிந்தனை; ஏனெனில், ஒரு செயலை நிறைவேற்றுவதற்கான அருளை அளிக்காமல், அதைச் செய்யுமாறு நம் ஆண்டவர் நம்மிடம் ஒருபோதும் கேட்கமாட்டார் (காண்க நாட்குறிப்பு #435).
எதைச் செய்வதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை என்று உணர்கிறீர்கள்? ஒருவேளை அது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு விவகாரமாக இருக்கலாம்; அல்லது ஆலயத்தில் நீங்கள் உதவி செய்ய அழைக்கப்படும் ஒரு பணியாக இருக்கலாம். அல்லது, நம் ஆண்டவர் உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒன்றை வைத்திருக்கலாம்; ஆனால் உங்களுக்குப் போதிய திறன் இல்லை என்ற உணர்வால் அதைப் பற்றிச் சிந்திப்பதையே நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் நாம் இயேசுவை நம்பினால், நம் வாழ்வில் அவரது நிறைவான திருவுளத்தை நிறைவேற்ற நம்மால் முடியும் என்பதையும் நம்ப வேண்டும். அவரது அருளால் நம்மால் செய்ய இயலாத எதற்கும் அவர் நம்மை ஒருபோதும் அழைக்கமாட்டார் என்று நாம் நம்ப வேண்டும்.
ஆண்டவரே, இன்றும் நான் உமக்கு “ஆம்” என்று சொல்கிறேன். உமது புனிதத் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கான என் அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கிறேன். நீர் எனக்கு அளித்துள்ள புனிதப் பணியை நிறைவேற்றுவதிலிருந்து கவலையோ நம்பிக்கையின்மையோ என்னைத் தடுக்க ஒருபோதும் நான் இடமளிக்காதிருப்பேனாக. இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
உயிர்ப்புப் பெருவிழாவுக்கான மேலும் சில பதிவுகள்
ஐந்தாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம்
ஏப்ரல் 7 – புனித ஜான் பாப்டிஸ்ட் தெ லா சால், அருள்பணியாளர்
(இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவின் எண்கிழமைக் காலத்தில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை)
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
மின்னூல் மற்றும் மென்மையான அட்டையுடைய அச்சுநூல் வடிவங்களில் கிடைக்கிறது:
Amazon – Barnes and Noble – Google Play – iTunes
இறை இரக்கம் பற்றிய அன்றாடச் சிந்தனைகள்:
புனித ஃபவுஸ்தீனாவுடன் 365 நாட்கள்





