செபிக்கும் திருத்தூதர் பேதுரு, ஹென்றிக் புளூமார்ட் வரைந்த ஓவியம்
ஒரு பணியை நிறைவேற்றக் கடவுள் நம்மை அழைக்கும்போது, செயலாற்றுவது யார்? கடவுளா, நாமா? உண்மையில், கடவுளும் நாமும் செயலாற்றுகிறோம்; கடவுளே ஊற்று, நாமோ கருவி. நாம் நமது சுதந்திர விருப்பத்துடன் முயற்சி செய்கிறோம்; ஆனால் நம் வழியாக ஒளிர்பவர் கடவுளே. ஒரு சன்னல் வீட்டில் ஒளியின் ஊற்றாகச் செயல்படக்கூடும் என்றாலும், ஒளிர்வது சன்னல் அல்ல, சூரியனே. அதுபோலவே, கடவுள் நம் வழியாக ஒளிரும்படி நாம் நம்மையே அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், நம் உலகில் கடவுள் ஒளிர்வதற்கான ஒரு சன்னல் மட்டுமே நாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் (காண்க நாள்குறிப்பு #438).
கடவுள் உங்கள் வழியாகப் பேரொளியுடன் ஒளிர வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அவரது அன்பின் கதிர்கள் பரவி, பிறருக்கு ஒளியூட்ட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியானால், அவரது அருளின் கருவியாக நீங்கள் மாறும்படி உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கருவி மட்டுமே, அருளின் ஊற்று அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். எல்லா அருளுக்கும் ஊற்றானவருக்கு உங்கள் உள்ளத்தைத் திறந்துவையுங்கள்; அவர் மிகுந்த வல்லமையுடனும் மாட்சியுடனும் உங்கள் வழியாக ஒளிர்வார்.
ஆண்டவரே, இரக்கமுள்ள உமது திருஇதயத்திற்கான ஒரு சன்னலாக என்னையே உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அன்பு ஆண்டவரே, என் வழியாக ஒளிரும். உமது அருளின் உண்மையான கருவியாக நான் இருப்பேனாக. எல்லா அருளுக்கும் இரக்கத்திற்கும் ஊற்றாக இருப்பவர் நீர், நீர் மட்டுமே என்பதை நான் எப்போதும் நினைவில் கொள்வேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஆறாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான ஆயத்த நவநாள் செபம்
உயிர்ப்புப் பெருவிழாவுக்கான மேலும் சில பதிவுகள்
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




