தமிழ்

சிந்தனை 100: நன்மையை நாடும் விருப்பம்

புனித தெரேசாவின் பரவசம், ஜெரார்ட் சேகர்ஸ் வரைந்த ஓவியம்

காணொளி

நாம் கடவுளுக்கும் பிறருக்கும் காட்டும் அன்புக்காகக் கடவுள் நம்மைப் பார்த்துப் புன்னகைத்து, நமக்கு அளவின்றிக் கைம்மாறு அளிக்கிறார்.  அவரது அருளால் தூண்டப்படும் நம் அன்புச் செயல்கள் விண்ணகத்தில் செல்வங்களாக மாற்றப்படுகின்றன.  ஆனால், செல்வங்களாக மாற்றப்படுவது இவை மட்டுமல்ல.  நன்மை செய்யவும் கடவுளுக்குப் பணிபுரியவும் வேண்டுமென்ற நம் விருப்பம்கூட மாற்றப்படுகிறது.  நம் உள்ளத்தின் மிகச் சிறிய நேர்மையான விருப்பங்கள் உட்பட அனைத்தையும் கடவுள் காண்கிறார்; அனைத்தையும் அருளாக மாற்றுகிறார் (காண்க நாட்குறிப்பு #450).

வாழ்வில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?  எதற்காக ஏங்குகிறீர்கள்?  உங்கள் விருப்பங்கள் பாவச் செயல்களோடு பிணைந்திருப்பதை உணர்கிறீர்களா?  அல்லது உங்கள் விருப்பங்களும் ஏக்கங்களும் விண்ணகத்தின் நன்மைகளையும் கடவுளின் செயல்களையும் நாடுகின்றனவா?  உங்கள் விருப்பங்களைக்கூட மாற்றியமைக்க முயலுங்கள்; நீங்கள் நிறைவான ஆசிகளைப் பெறுவீர்கள்!

ஆண்டவரே, என் இதயத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு விருப்பத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  உமக்காகவும், இவ்வுலகில் உமது திருச்சித்தம் நிறைவேறுவதற்காகவும் ஏங்க எனக்கு உதவியருளும்.  நீர் விரும்புவதையே நானும் விரும்புவேனாக; எங்கள் உலகில் இரக்கம் பெருக வேண்டுமென்று ஏங்குவேனாக.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

எட்டாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள்

உயிர்ப்புப் பெருவிழாவுக்கான மேலும் சில பதிவுகள்

பாஸ்கா காலச் செபங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்