தமிழ்

சிந்தனை 101: பிறர் வழியாகப் பேசும் கடவுள்

படம்: Junnifer Baya தளம்: Pixabay

காணொளி

நீங்கள் கேட்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கடவுள் உங்களிடம் சொல்ல விரும்புவது அடிக்கடி நிகழ்கிறது.  நீங்கள் மறையுரையைக் கேட்கும்போதோ, ஒரு நூலை வாசிக்கும்போதோ, வானொலியில் ஏதாவது கேட்கும்போதோ, நண்பருடன் பேசும்போதோ, மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததுபோல் தோன்றும் ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைச் சிறப்பாக ஈர்க்கலாம்.  இந்த உள்தூண்டுதலுக்குச் செவிசாயுங்கள்; இது கடவுளின் இரக்கத்தால் உங்களுக்குக் கிடைக்கும் ஒரு கொடையும், அவர் உங்கள்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடும் ஆகும் (காண்க நாட்குறிப்பு #456).

அண்மையில் உங்கள் கவனத்தை ஈர்த்த ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.  உங்களுக்காகவே சொல்லப்பட்டதுபோல் தோன்றிய ஏதாவது ஒன்றை நீங்கள் கேட்டீர்களா?  உங்கள் மனதில் தொடர்ந்து இடம்பிடித்திருக்கும் ஏதாவது ஒன்று உள்ளதா?  அப்படியானால், அந்த எண்ணத்தோடு சிறிது நேரம் செலவிட்டு, அது ஆண்டவரிடமிருந்து வருகிறதா என்பதையும், அதன் வழியாக அவர் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதையும் பகுத்தறிய முயலுங்கள்.  இது உங்களோடு பேசும் கடவுளின் குரலாகவும், அவரது பேரிரக்கத்தின் செயலாகவும் இருக்கலாம்.

ஆண்டவரே, உமது குரலைக் கேட்க விரும்புகிறேன்.  நீர் என்னிடம் பேசும் வார்த்தைக்குக் கவனமாகச் செவிசாய்க்க எனக்கு உதவியருளும்.  நீர் பேசும்போது, நான் கேட்கவும், தாராள மனத்துடனும் அன்புடனும் உமக்குப் பதிலளிக்கவும் எனக்கு உதவியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஒன்பதாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம்

ஏப்ரல் 11 – புனித ஸ்தனிஸ்லாஸ், ஆயரும் மறைசாட்சியும்
(இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவின் எண்கிழமையில் வருவதால், வழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை)

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/விழாக்கள்