பாவசங்கீர்த்தனம், மொல்தேனி ஜுசெப்பே வரைந்த ஓவியம்
கடவுள் தம் அருள்பணியாளர்களைத் தமது பிரதிநிதிகளாக நம்மிடம் அனுப்புகிறார். அருள்பணியாளர்கள் நிறைவுள்ளவர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள். ஒப்புரவு அருளடையாளத்தில் இது சிறப்பாக உண்மையாகிறது. அந்த அருளடையாளத்தை நாம் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் அணுகுவது இன்றியமையாதது. பாவமன்னிப்பு வழங்கும் புனித ஆற்றலால் நம் ஆன்மாவினுள் நுழைந்து, அதைத் தூய்மைப்படுத்திக் குணமாக்குவதற்குப் பாவசங்கீர்த்தனம் கேட்கும் அருள்பணியாளரால் இயலும்படி, நம் ஆன்மாவில் உள்ள பாவத்தை அவர் காண நாம் அனுமதிக்க வேண்டும் (காண்க: நாட்குறிப்பு #494-496).
நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்கிறீர்களா? அப்படியானால், எத்தனை முறை செய்கிறீர்கள்? உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதைவிட உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்கிறீர்களா? ஒப்புரவு அருளடையாளத்தில் ஆண்டவர் உங்களுக்கு அளவிட முடியாத ஒரு கொடையை அளித்துள்ளார். திறந்த உள்ளத்தோடு இந்தக் கொடையைப் பெற்றுக்கொள்ள அவர் உங்களை அழைக்கிறார். இந்த அழைப்பைக் கண்டு அஞ்சாதீர்கள்; மாறாக, நம் ஆண்டவர் உங்களுக்கு வழங்க விரும்பும் ஏராளமான அருள்கொடைகளை ஆவலுடன் எதிர்நோக்கி, அதை நோக்கி விரைந்து செல்லுங்கள். உங்களால் இயன்றவரை தவறாமல் அவ்வாறு செய்யுங்கள்.
ஆண்டவரே, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக எனக்கு அளிக்கப்படும் உமது இரக்கத்தைக் கண்டு நான் ஏன் அஞ்சுகிறேன்? பாவமன்னிப்பு வழங்கும் செயலின் வழியாகப் பொழியப்படும் உமது புனித இரக்கத்தைக் கண்டு நான் ஏன் அஞ்சுகிறேன்? என் பாவங்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் அறிக்கையிட்டு, இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டு உமது திருஇதயத்துடன் மீண்டும் இணைக்கப்பட எனக்குத் துணிவையும் தாழ்மையையும் தாரும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
மின்னூல் மற்றும் மென்மையான அட்டையுடைய அச்சுநூல் வடிவங்களில் கிடைக்கிறது:
Amazon – Barnes and Noble – Google Play – iTunes
இறை இரக்கம் பற்றிய அன்றாடச் சிந்தனைகள்:
புனித ஃபவுஸ்தீனாவுடன் 365 நாட்கள்





