தமிழ்

சிந்தனை 146: கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தியானித்து செபித்தல்

படம் வழங்கியது Pixabay.

காணொளி

நம் ஆண்டவரின் புனிதத் திருப்பாடுகளைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.  ஆனால் உண்மையான உணர்வோடும் அன்போடும் அவரது திருப்பாடுகளை உற்றுநோக்கச் சிலரால் மட்டுமே முடிகிறது.  நமது செபத்தில், மிகுந்த பக்தியோடு நம் ஆண்டவரின் திருப்பாடுகளைத் தியானிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  இது நம் சொந்த முயற்சியால் நாம் செய்வது என்பதைவிட, நம் ஆண்டவர் நமக்குள் செயலாற்ற நாம் அவரை அனுமதிப்பதாகும்.  அவர் அனுபவித்த பெரும் துன்பத்தை நமக்கு வெளிப்படுத்த அவரை நாம் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அவர் வெளிப்படுத்தும்போது, நம்மீது கொண்ட அன்பினால் இத்தகைய கொடிய சாவை ஏற்றுக்கொண்ட அவர்மீதான அன்பில் நம் முழு உள்ளமும் ஆட்கொள்ளப்பட இடமளிக்க வேண்டும் (காண்க: நாட்குறிப்பு #737).

நம் ஆண்டவரின் திருப்பாடுகளைத் தியானிக்க நீங்கள் நேரம் செலவிடுகிறீர்களா?  ஒருவேளை, அவரது உயிர்ப்பையும் பாவம் மற்றும் சாவின் மீது அவர் பெற்ற மாபெரும் வெற்றியையும் நோக்குவது எளிதாக இருக்கலாம்.  ஆனால் உயிர்ப்புக்கும் மகிமையடைதலுக்கும் செல்லும் வழி திருப்பாடுகளின் வழியே செல்கிறது.  நம் ஆண்டவர் அனுபவித்த ஒவ்வொரு வலியிலும் ஒவ்வொரு துன்பத்திலும் நீங்கள் ஈர்க்கப்படுவதற்கு உங்களையே அனுமதிக்க எவ்வளவு மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  அவரது திருப்பாடுகளை அவற்றின் உண்மைத் தன்மையில் காண்பது, அவரை இன்னும் ஆழமாக அன்பு செய்ய உங்களுக்கு உதவுகிறது.  அவரது துன்பத்தை நீங்கள் எந்த அளவுக்கு உணர்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் அன்பினாலும் அவரது திருவுளத்திற்குப் பணிந்திருப்பதாலும் காயமுற்ற அவரது இதயத்தை ஆறுதல்படுத்த விரும்புவீர்கள்.  கிறிஸ்துவின் திருப்பாடுகளின் ஒவ்வொரு அம்சமும் உங்களோடு பேசவும் உங்களை மாற்றவும் அனுமதியுங்கள்.  இதன் பலனாக, கடவுள்மீது இன்னும் ஆழமான அன்பும் உங்களைச் சுற்றித் துன்புறுவோர்மீது நிறைவான இரக்கமும் உங்களில் பெருகும்.

ஆண்டவரே, உமது புனிதத் திருப்பாடுகளை உணர்ந்துகொள்ள எனக்கு உதவியருளும்.  இத்தகைய வேதனையை நீர் தாங்கிக்கொள்ளச் செய்த அன்பைக் கண்டுணர எனக்கு உதவியருளும்.  அனைவர்மீதும் நீர் கொண்டுள்ள முடிவில்லா அன்பை உமது திருப்பாடுகளில் நான் காண்பேனாக. நானும் உம்மீது கொண்டுள்ள அதே அன்போடு துன்புறுவோரை அன்பு செய்வேனாக.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மே 26 – புனித பிலிப்பு நேரி, அருள்பணியாளர்—நினைவு நாள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்