தமிழ்

சிந்தனை 181: புனிதப் பற்றின்மை

உங்களுக்கான இறைத்திருவுளம் என்னவாக இருக்கிறது என்பது முக்கியமா?  முதலில் இது ஒரு விசித்திரமான கேள்வியாகத் தோன்றலாம்.  ஆனால் இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.  கடவுள் உங்களிடம் எதை விரும்புகிறார் என்பது முக்கியமா?  இடைவிடாமல் உழைக்க அவர் உங்களை அழைத்தால் என்ன?  அல்லது அமைதியாக ஓய்ந்திருக்க அவர் உங்களை அழைத்தால் என்ன?  அல்லது…

மேலும் படிக்க

சிந்தனை 180: இயேசுவின் திருப்பாடுகள்

நற்செய்திகளை நன்கு அறிந்தவர்களாகிய நாம், சில வேளைகளில், கிறிஸ்துவின் துன்பங்களைக் குறித்து ஒருவித அலட்சிய உணர்வுக்கு ஆளாகலாம்.  ஒவ்வோர் ஆண்டும் அவரது பாடுகளின் வரலாறு வாசிக்கப்படுவதைக் கேட்கிறோம்; அவரது பாடுகளைச் சித்தரிக்கும் பல படங்களையும் பார்த்திருக்கிறோம். இவ்வாறு அவை நமக்குப் பழகிப்போனதால், அவை ஏற்படுத்த வேண்டிய உரிய தாக்கத்தை ஏற்படுத்த நாம் இடமளிக்கத் தவறலாம்…

மேலும் படிக்க

சிந்தனை 179: அக வறட்சியை எதிர்கொள்ளுதல்

“ஆண்டவர் அளிக்கிறார், ஆண்டவர் எடுத்துக்கொள்கிறார்…” (யோபு 1:21).  இது எவ்வளவு உண்மையானது!  கடவுளின் நிறைவான ஆறுதலை நாம் அனுபவிக்கும் வேளைகள் வாழ்வில் உண்டு.  குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சி நிலவும் தருணங்களாகவோ, மற்றொருவரின் நிபந்தனையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் வேளைகளாகவோ அவை இருக்கலாம்.  சில…

மேலும் படிக்க

சிந்தனை 178: நம் சொந்த முயற்சியால் மட்டுமே புனிதத்தை ஒருபோதும் அடைய முடியாது

வாழ்வில் புனிதத்தை அடைய விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் சொந்த முயற்சியால் மட்டும் அதை அடைய முடியாது. உங்களுக்கு மற்றொருவரின் உதவி தேவை; ஏன், பலருடைய உதவியும் தேவை. பிறருடைய அன்பான கரங்களால் நாம் வழிநடத்தப்பட ஆண்டவர் நமக்குப் பல வழிகளைத் தந்துள்ளார். சிலருக்குக் கிடைத்துள்ள ஆன்மிக வழிகாட்டி பல…

மேலும் படிக்க

சிந்தனை 177:  புனிதமான கீழ்ப்படிதல்

கடவுளின் திருவுளத்திற்குப் பதிலாக நமது சொந்த விருப்பத்தின்படி செயல்படுவதிலிருந்து நம்மைக் காக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புகளில் ஒன்று புனிதமான கீழ்ப்படிதல். துறவற வாழ்வில் இருப்பவர்கள் இதை நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாழும் பேறு பெற்றவர்கள். வெளிப்புறமான இந்த நடைமுறை தங்கள் உள்ளத்திலும் வேரூன்ற அனுமதிப்பதன் வழியாக, தாங்கள் வாழ்வது…

மேலும் படிக்க

சிந்தனை 176: உலகின் பாவத்தை எதிர்த்துப் போராடுதல்

கடவுள் உலகை நோக்கும்போது எதைக் காண்கிறார்? தமது படைப்பின் அழகையும், தமது திட்டத்தின் நிறைவான ஒழுங்கையும், தமது மகன்களும் மகள்களும் இருப்பதையும் அவர் நிச்சயமாகக் காண்கிறார். ஆனால் எண்ணற்ற பாவங்களின் கொடூரத்தையும் அவர் காண்கிறார். மிகச் சிறிய பாவம்கூட…

மேலும் படிக்க

சிந்தனை 175:  வாழ்வின் விவரங்களில் காணப்படும் அன்பு

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர் ஒருவர் இருப்பது எவ்வளவு இனிமையானது!  பிறரை அறிந்துகொள்ளவும், பிறர் நம்மை அறிந்துகொள்ளவும் நாம் ஏங்குகிறோம்.  மிகச் சிறிய போராட்டத்தைக்கூட மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளவோ, மிகச் சிறிய மகிழ்ச்சியைக்கூட வெளிப்படுத்தவோ உங்களுக்கொருவர் கிடைக்கும்போது, உண்மையான நண்பரை நீங்கள் கண்டடைந்திருக்கிறீர்கள்.  ஆண்டவர்…

மேலும் படிக்க

சிந்தனை 174: இறைவன் குறிக்கும் நேரம் மிகச் சரியானது

இந்த உலகில் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருக்காக அற்புதமான செயல்களைச் செய்ய நாம் விரும்பும்போது, சில வேளைகளில் நமது வழியிலும் நாம் குறித்த நேரத்திலும் செயல்களைச் செய்ய முயலலாம். ஆனால் இறைவனின் திருவுளத்தை உண்மையாக நிறைவேற்ற, நீங்கள் ஊக்கமாகச் செபித்து, அவரது புனிதத் திருவுளத்திற்கு உங்களைக் கையளிக்க வேண்டும்; அதன் பின்னர் அதையும் கையளிக்க வேண்டும்…

மேலும் படிக்க

சிந்தனை 173: ஒருவரோடு ஒன்றித்திருப்பது மூவரோடும் ஒன்றித்திருப்பதாகும்

அதிபுனித மூவொரு கடவுள் ஒரே இறை இயல்பைக் கொண்டவராகவும், அதேவேளையில் தனித்துவமுள்ள மூன்று ஆட்களாக இருப்பவராகவும் விவரிக்கப்படுகிறார். இதனால், தனித்துவமுள்ள இந்த மூன்று ஆட்களும் நிறைவான ஒன்றிப்பில் பங்குகொள்கின்றனர். உண்மையில், அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபட்டவர்களாக இல்லாவிட்டால், அவர்கள் “ஒன்றித்திருக்க” முடியாது. ஆகவே, கடவுளைப் பற்றிப் பேசும்போது…

மேலும் படிக்க

சிந்தனை 172: பொறுமையுடன் பணிதல்

நீங்கள் பொறுமையுள்ளவரா? பொறுமையும் பொறுமையின்மையும் உங்கள் விருப்பத்திற்குள் நிகழும் போராட்டத்திலிருந்தே பிறக்கின்றன. வாழ்வில் பல வேளைகளில், கடவுள் அல்லாத வேறொன்று உங்கள் விருப்பத்தை ஈர்க்கிறது; கடவுள் உங்களை வழிநடத்தாத ஒன்றை நீங்கள் விரும்புகிறீர்கள். பொறுமை என்பது சற்றுப் பின்வாங்கி, ஆழமாக மூச்செடுத்து…

மேலும் படிக்க