தமிழ்

சிந்தனை 122: நீங்கள் தேர்ந்தெடுக்க முடிந்தால்

உலகின் அனைத்துச் செல்வங்களுக்கும் இயேசுவுடனான நெருக்கமான, அன்பான உறவுக்கும் இடையே நீங்கள் தேர்ந்தெடுக்க முடிந்தால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? இதற்கு அவசரப்பட்டுப் பதிலளிக்காதீர்கள். இயேசுவைத் தேர்ந்தெடுப்பதே சரியான பதில் என்று நமக்குத் தெரிந்திருக்கலாம்; ஆனால் நீங்கள் அவரைத் தேர்ந்தெடுப்பீர்களா? கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் அனுபவிக்கக்கூடிய அதிகாரமும் உலகியல் “சுதந்திரமும்”…

மேலும் படிக்க

சிந்தனை 121: உங்கள் இதயத்தின் மறைவான அகத்தோட்டம்

உங்கள் வீட்டில் மறைவான ஓர் உள்முற்றமும், அதில் ஒரு தோட்டமும் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த இரகசியத் தோட்டத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. அங்கே நீங்கள் பயிரிட்டு, நிலத்தைப் பண்படுத்தி, உழைத்து, களையெடுத்து, அறுவடை செய்தீர்கள். பின்னர் இந்தத் தோட்டத்தின் விளைபொருட்கள் இரகசியமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன…

மேலும் படிக்க

சிந்தனை 120: கடவுள்மீது தூய அன்பு

உங்கள் வாழ்வின் இறுதி நோக்கம் அன்பே.  இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், முதன்மையாகக் கடவுளைத் தூய அன்புடன் நேசிப்பதே அதன் நோக்கம்.  அன்பு தூய்மையாக இருக்க வேண்டுமெனில், அது எல்லாச் சுயநலத்திலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்.  தூய அன்பு, நேசிக்கப்படுபவரை மட்டுமே நோக்குகிறது.  நாம் கடவுளைத் தூய அன்புடன் நேசிக்கும்போது, நாம்…

மேலும் படிக்க

சிந்தனை 119: அக மற்றும் புற ஒறுத்தல் முயற்சிகள்

ஒறுத்தல் என்பது, இவ்வுலகின் நிலையற்ற பொருள்களிலிருந்து மேலும் பற்றற்றவர்களாக வளர்வதற்காக, உங்கள் சொந்த விருப்பத்தை மறுக்கும் ஒரு பயிற்சியாகும். கடவுளையும் அவரது திருவுளத்தையும் தவிர மற்ற அனைத்திலிருந்தும் பற்றை விடுவிக்க நாம் முயல வேண்டும். நாம் விரும்புவதும் ஆசைப்படுவதும் எல்லாமே தீயவை என்பதல்ல; ஆனால் உண்மையான புனிதத்தை நாம் விரும்பினால், நமது…

மேலும் படிக்க

சிந்தனை 118: பிடிவாதமுள்ள இதயம்

இறை இரக்கம் நம் வாழ்வில் நுழைவதை நாம் தடுக்கும் முக்கிய வழிகளில் ஒன்று பிடிவாதம் ஆகும். குறிப்பாக, நமது செருக்கினால் நம் சொந்தக் கருத்தையே பிடிவாதமாகப் பற்றிக்கொண்டு, அதனால் உண்மையை ஏற்க மனம் திறக்காதபோது, அருளுக்கான கதவை நாம் மூடிவிடுகிறோம். இது…

மேலும் படிக்க

சிந்தனை 117: உங்கள் இதயத்தின் தனிமட வளாகம்

சில அருள்சகோதரிகளும் துறவிகளும் தனிமட வளாகத்தின் எல்லைக்குள் தனித்துறை வாழ்வு வாழ்கிறார்கள். அந்த இறைநம்பிக்கைச் சமூகத்தின் உறுப்பினர்களைத் தவிர, வேறு எவரும் தகுந்த காரணமின்றி அந்த வளாகத்திற்குள் நுழையக் கூடாது. மற்றவர்கள் மடத்தலைவரின் அனுமதியுடன் மட்டுமே உள்ளே செல்லலாம். ஒருவேளை…

மேலும் படிக்க

சிந்தனை 116: கடவுள் நம்மைச் சார்ந்திருத்தல்

கடவுள் தம்மையே முழுமையாக நிலைநிறுத்திக்கொள்வதால், அவர் முற்றிலும் எவரையும் சாராதவர்.  தந்தையும் மகனும் தூய ஆவியாரும் நிறைவான ஒன்றிப்பில் உள்ளனர்; இந்த ஒன்றிப்பில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்தும் ஒருவரை ஒருவர் சார்ந்தும் இருக்கின்றனர்.  இவ்வாறு ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதே அவர்களுக்குப் போதுமானது.  எனினும், மூவொரு கடவுள் தாமாகவே முன்வந்து சார்ந்திருக்கத் தேர்ந்துகொண்டார்…

மேலும் படிக்க

சிந்தனை 115: கடவுளின் திருவுளம் உங்களைப் பாதுகாக்கும்

கடவுளின் திருவுளம் என்பது, உங்கள் எதிர்காலத்திற்காக அவர் வகுத்துள்ள திட்டத்தைவிட மிக மேலானது.  உங்களைக் குறித்து அவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும்விட மேலானது.  அவரது திருவுளமே நீங்கள் புனிதமடைவதற்கான பாதை; அதுவே மிகுந்த ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று.  அவரது திருவுளம் செயலாற்றுவதாகவும் செயலாற்றாததாகவும் (அனுமதிப்பதாகவும்) உள்ளது.  அது…

மேலும் படிக்க

சிந்தனை 114: உலகப் பற்றின்மை

“உலகம்” பற்றித் திருவிவிலியத்தில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது; குறிப்பாக இயேசுவே அதைப் பற்றிப் பேசியுள்ளார்.  உலகம் உங்களை வெறுக்கும் என்றும், உங்களைப் புரிந்துகொள்ளாது என்றும் அவர் கூறினார்.  உண்மையில், உலகம் உங்களைத் துன்புறுத்தும்.  இது சிலருக்கு அச்சத்தையும் மனக்கலக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  இது உள்ளத்தில் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது…

மேலும் படிக்க

சிந்தனை 113: நித்திய தந்தைக்கு ஒரு காணிக்கை

நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த செபம், “ஒப்புக்கொடுக்கும் செபமே.”  ஒப்புக்கொடுக்கும் செபம் என்பது, கிறிஸ்து சிலுவையில் ஒப்புக்கொடுத்த ஒரே பலிக் காணிக்கையுடன் இணைந்து தந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்படும் ஒரு பலியாகும்.  நாம் நம்மைத் தனியாக ஒப்புக்கொடுப்பதில்லை.  கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து நம்மை ஒப்புக்கொடுக்கிறோம்.  குறிப்பாக…

மேலும் படிக்க