தமிழ்

சிந்தனை 325: புனிதர்களைச் சார்ந்திருத்தல்

கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வாழ்ந்த ஓர் ஆன்மாவைக் கற்பனை செய்து பாருங்கள்.  அந்த ஆன்மா புனிதத்தின் சிகரங்களை எட்டியது; உலகக் கவனச்சிதறல்களால் பின்வாங்கவில்லை.  வாழ்நாள் முழுவதும் நம் ஆண்டவருக்குப் பணிபுரியவும், பிறருக்கு இரக்கத்தின் கருவியாகத் தொடர்ந்து விளங்கவும் அது நாடியது.  பலர்…

சிந்தனை 165: உத்தம மனஸ்தாபம்

நம் பாவங்களை நாம் உணரும்போது, பல்வேறு விதங்களில் பதிலளிக்கக்கூடும். நாம் அக்கறையின்றி இருக்கலாம்; அல்லது கடவுளின் நீதிக்குப் பயந்து மனந்திரும்பலாம். ஆனால் அன்போடு கடவுளிடம் திரும்பி, அந்த அன்பின் விளைவாக உண்மையான மனவருத்தம் கொள்வதே மிகச் சிறந்த பதிலாகும். கடவுள்மீது நமக்கு மிகுந்த ஆர்வமிக்க அன்பு இருந்தால்…

சிந்தனை 156: ஆண்டவரே நம் அடைக்கலம்

வாழ்வில் சில வேளைகளில் அச்சம் உங்களை ஆட்கொள்கிறது.  மலைக்க வைக்கும் ஒரு பணி உங்கள் முன் இருக்கலாம்; அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு பாதையில் நீங்கள் நடந்துகொண்டிருக்கலாம்.  இவையும் வாழ்வின் இன்னும் பல அனுபவங்களும் அச்சத்திற்கும் கவலைக்கும் காரணமாகலாம்.  அறியாதவற்றைப் பற்றிய அச்சம் ஆட்கொள்ளக்கூடும்…

சிந்தனை 28: குறைகூறுவதற்கான சோதனைகள்

சில வேளைகளில் குறைகூறும் சோதனை நமக்கு ஏற்படுகிறது.  கடவுளையும் அவரது நிறைவான அன்பையும் நிறைவான திட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கும் சோதனை ஏற்படும்போது, அது வெறும் சோதனை மட்டுமே என்பதை அறிந்துகொள்ளுங்கள்…

சிந்தனை 16: கடவுளிடம் நம்மை முழுமையாகக் கையளித்தல்

கடவுளின் திருமுன் விழுங்கள். அவர் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குங்கள். உங்களால் முடிந்தால், உடலளவிலும் அவ்வாறு செய்யுங்கள். அது மற்றவர்களின் கவனத்தைச் சிதறடிக்குமென்றால், உள்ளத்தில் அவ்வாறு செய்யுங்கள். கடவுளின் திருமுன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது இறை இரக்கத்தையும் அதிதூய திருவுளத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்துமாறு அவரிடம் மன்றாடுங்கள்.  வாழ்வில் பல வேளைகளில்…