தமிழ்

சிந்தனை 28: குறைகூறுவதற்கான சோதனைகள்

படம்: Needpix.com வழியாக

காணொளி

சில வேளைகளில் குறைகூறும் சோதனை நமக்கு ஏற்படுகிறது.  கடவுளையும் அவரது நிறைவான அன்பையும் நிறைவான திட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கும் சோதனை ஏற்படும்போது, அது வெறும் சோதனை மட்டுமே… அதற்கு மேல் எதுவுமில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  கடவுளின் அன்பைச் சந்தேகித்துக் கேள்விக்குள்ளாக்கும் அந்தச் சோதனையின் நடுவில், உங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொண்டு, சுயபரிதாபத்தைக் கைவிடுங்கள்.  இவ்வாறு செய்வதில் நீங்கள் வலிமை பெறுவீர்கள் (காண்க: நாட்குறிப்பு #25).

இந்த வாரத்தில் நீங்கள் எதைப் பற்றி அதிகமாகக் குறைகூறியிருக்கிறீர்கள்?  கோபப்படவோ எரிச்சலடையவோ உங்களை அதிகமாகத் தூண்டுவது எது?  இந்தச் சோதனை உங்களைச் சுயபரிதாப உணர்வுகளுக்கு இட்டுச் சென்றுள்ளதா?  கடவுளின் நிறைவான அன்பின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது பலவீனப்படுத்தியுள்ளதா?  இந்தச் சோதனையைச் சிந்தித்துப் பார்த்து, அன்பிலும் நற்பண்பிலும் வளர்வதற்கான ஒரு வழியாக அதைக் காணுங்கள்.  பெரும்பாலும், நமது மிகப் பெரிய போராட்டம் என்ற மறைவில் இருப்பது, புனிதத்தில் வளர்வதற்கான நமது மிகச் சிறந்த வழியே.

ஆண்டவரே, நான் குறைகூறியதற்காகவும், கோபப்பட்டதற்காகவும், உமது நிறைவான அன்பைச் சந்தேகித்ததற்காகவும் மனம் வருந்துகிறேன்.  சுயபரிதாப உணர்வுகளில் விழுவதற்கு என்னை நானே அனுமதித்ததற்காகவும் மனம் வருந்துகிறேன்.  இன்று இந்த உணர்வுகளைக் கைவிட்டு, இந்தச் சோதனைகளை இன்னும் ஆழமான நம்பிக்கையுடனும் சரணடைதலுடனும் வாழும் தருணங்களாக மாற்ற எனக்கு உதவும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜனவரி 28: புனித தாமஸ் அக்குயினாஸ், அருள்பணியாளர், மறைவல்லுநர்—நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்