தமிழ்

சிந்தனை 44: ஆண்டவரின் பார்வை அச்சத்தை அகற்றுகிறது

நம் ஆண்டவர் இரவும் பகலும் நிறைவான அன்போடும் பாசத்தோடும் உங்களை நோக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதையும், எல்லாச் சூழல்களிலும் உங்களோடு நடக்கிறார் என்பதையும் அறிவீர்களா? இதை நம்புவது கடினமாக இருக்கலாம்; ஏனெனில் நம் காதுகளால் அவரது குரலைக் கேட்கவோ, நம் கண்களால் அவரைக் காணவோ, அல்லது…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…

சிந்தனை 360: ஆன்மிகப் போராட்டம்

சோதிப்பவனாகிய சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான்; ஆனால் அவனுக்கு அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அவனுக்குச் சிறிதும் கவனம் செலுத்தக் கூடாது. அவனது எண்ணங்களோடு வாதாடக் கூடாது. அவனோடு பேரம் பேசக் கூடாது. சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் துணிவும், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கையும், எதிர்நோக்கும் இருக்க வேண்டும். ஆகிவிடாதீர்கள்…

சிந்தனை 344: பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்

இந்தத் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம்.  பாவத்தைத் தவிர்க்க நீங்கள் முனைப்புடன் முயல வேண்டும் என்ற அளவில், அதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும்.  ஆனால், கடவுளின் இரக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பது பெருங்கடலுடன் ஒப்பிடுகையில் ஒரு துளி நீர் மட்டுமே என்பதை உணர்ந்தால், நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்…

சிந்தனை 339: தூய ஆன்மா

நீங்கள் உடனடியாக இத்தகைய முடிவுக்கு வராமல் இருக்கலாம்; ஆனால் கடவுள்மீது தூய அன்பு கொண்ட ஓர் ஆன்மாவைக் கண்டு பலர் அஞ்சுகிறார்கள்.  அவர்களிடம் இருக்கும் அந்த “அச்சம்”, அத்தகைய ஆன்மாவை எதிர்ப்பதற்கான அச்சமே.  தீய நோக்கம் கொண்டவர்கள் அத்தகைய ஒருவரைத் தாக்கத் துணிய மாட்டார்கள்; ஏனெனில் அது தங்களுக்கே எதிராகத் திரும்பக்கூடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.  சாத்தியமே இல்லை…