தமிழ்

சிந்தனை 362: இரக்கத்தின் இரு இதயங்கள்

இயேசுவின் இதயம் இரக்கமே உருவானது.  அது உலகின்மீது பொழியும் அருளின் ஊற்று.  இது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இரக்கத்தின் ஊற்றாக மாற வேண்டிய மற்றோர் இதயமும் உள்ளது; அதுதான் உங்கள் இதயம்.  உங்கள் இதயம்… என்னும் அளவுக்கு நீங்கள் ஆண்டவரின் இரக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்.

சிந்தனை 361: தியாகமும் செபமும்

இதைப் புரிந்துகொள்வதும் நம்புவதும் கடினமாக இருக்கலாம்; இருப்பினும், தூய செபத்துடன் இணைந்த அகத் தியாகம் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு வியப்புக்குரிய நன்மையை விளைவிக்கிறது.  உண்மையில், நாள்தோறும் அகத்தளவில் அர்ப்பணித்த புனித ஆன்மாக்களின் வல்லமை மறைப்பணியாளர்களுக்கு இல்லையென்றால்…

சிந்தனை 360: ஆன்மிகப் போராட்டம்

சோதிப்பவனாகிய சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான்; ஆனால் அவனுக்கு அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அவனுக்குச் சிறிதும் கவனம் செலுத்தக் கூடாது. அவனது எண்ணங்களோடு வாதாடக் கூடாது. அவனோடு பேரம் பேசக் கூடாது. சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் துணிவும், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கையும், எதிர்நோக்கும் இருக்க வேண்டும். ஆகிவிடாதீர்கள்…

சிந்தனை 357: அருளின் தூண்டுதல்கள்

ஒருவர் மனக்கலக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் அவரிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். அவருடன் பேசிப் பழகுவது உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் பெருமளவில் செலவிட வேண்டிய சுமையாகிவிடும் என்று நினைப்பது எளிது. ஆனால் உங்கள் உரையாடலை வழிநடத்துபவர் ஆண்டவராக இருந்தால், அவரால் குறுகிய நேரத்தில் வியத்தகு செயல்களைச் செய்ய முடியும். நிச்சயமாக, சில…

சிந்தனை 345: இறைவனில் மூழ்குதல்

நீங்கள் எப்போதாவது இறைவனில் திளைத்ததுண்டா?  பெரும்பாலான மக்களுக்கு இது அரிதான ஓர் அனுபவம்; பலருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதே இல்லை.  இறைவனில் திளைப்பது அல்லது மூழ்குவது என்பது, அவரது முன்னிலையில் உங்களையே மறந்துவிட்டதுபோல் உணரும் அளவுக்கு இறைவேண்டலில் ஆழ்ந்திருப்பதாகும்.  இவ்வாறு நிகழும்போது, ஆண்டவர் உங்களை முழுமையாக…

சிந்தனை 340: சோதனைக்கு உட்படுத்தப்படுதல்

சோதனைக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக இனிமை தராமல் இருக்கலாம்; ஆனால் சில வேளைகளில் அதனால் நாம் பெரிதும் பயனடைகிறோம்.  ஆண்டவர் இதைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறார்.  சோதனைக்கு உட்படுத்தப்படுவது பாவத்தூண்டுதல் அல்ல; மாறாக, தமது திருவுளத்திற்கு நாம் இன்னும் ஆழமாகப் பணிந்திருக்க நம்மை அழைப்பதற்காக, ஒரு சோதனையை நாம் தாங்கிக்கொள்ள ஆண்டவர் அனுமதிக்கும் ஒரு வழியாகும்.  எப்போது…

சிந்தனை 337: பிறரின் மனக்கவலையைத் தணிக்க உதவுதல்

நம் வாழ்வில் அவ்வப்போது கலக்கமடைந்தவர்களையோ மனமுடைந்தவர்களையோ கவலையில் இருப்பவர்களையோ சந்திப்போம் என்பது ஏறக்குறைய உறுதி. அவர்கள் ஏதாவதொன்றைப் பற்றியே அளவுக்கு மீறிச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம்; அவர்களுடைய சிந்தனை ஓரளவு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக்கூட இருக்கலாம். இரக்கம் காட்டுவதற்கு இது எத்தகைய அருள் நிறைந்த வாய்ப்பு! மனக்கவலை…

சிந்தனை 335: என்றும் மன்னித்தல்

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபிப்பதும், அவர்களை மிகுந்த மரியாதையுடனும் பரிவுடனும் நடத்துவதும் வாழ்வில் செய்வதற்கு மிகவும் கடினமான செயல்களில் அடங்கும். ஆனால் அவர்களை வெறுப்பதாலோ, அவர்கள்மீது கடுமையாகச் சீறுவதாலோ என்ன பயன்? அவர்களுக்கு இந்த “தீங்கை” இழைப்பது, அவர்களுடைய ஆன்மாவைவிட உங்கள் சொந்த ஆன்மாவுக்கே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னியுங்கள்…

சிந்தனை 333: எளிமை

வாழ்க்கை சில நேரங்களில் சிக்கலானதாகத் தோன்றலாம்; நாமும் அப்படித் தோன்றலாம்.  ஆனால், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்து, கடவுளின் பார்வையிலும் திருவுளத்திலும் வாழ்க்கை எளிமையானது என்பதை நாம் உணர வேண்டும் என்பதே உண்மை.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு நாளும் அவருக்கு “ஆம்” என்று சொல்லி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, நம்பிக்கை கொள்வதுதான் என்பதால் வாழ்க்கை எளிமையானது…