“கிறிஸ்துவும் செல்வந்த இளம் ஆட்சியாளரும்” — வரைந்தவர் ஹைன்ரிச் ஹோஃப்மன்
வாழ்வில் பல வேளைகளில், உலகத்திற்குரிய நிலையற்ற பொருள்கள் நமக்கு நிறைவு தருகின்றன என்று நம்பும் கண்ணியில் நாம் விழக்கூடும். நம் பாவங்களே நமக்கு நிறைவு தருகின்றன என்று எண்ணி நாம் ஏமாந்துபோகவும் கூடும். விந்தையாக, அவை ஒருவகையான தற்காலிக நிறைவைத் தரத்தான் செய்கின்றன. ஆனால் இந்த “நிறைவு” ஆழமற்றதும் ஏமாற்றுவதுமாகும். கடவுளைத் தவிர வேறெதுவும் நம் ஆன்மாக்களுக்கு நிறைவு தராது என்பதை நாம் ஆழமாக உணரும்போது, நாம் ஆசி பெறுவோம்; அவரில் மட்டுமே உண்மையான நிறைவை நாடும் மனப்பக்குவமும் பெறுவோம். அவரது இரக்கத்தை ஆழமாக உணர்ந்துகொள்வதன் வழியாக மட்டுமே இது நிகழ்கிறது (காண்க நாள்குறிப்பு #42).
கடவுளின் இரக்கத்தால் நிறைவு பெற ஏங்குகிறீர்களா? ஒவ்வொரு நாளும் அவரது இரக்கத்தை நாடுகிறீர்களா? உங்கள் உள்ளத்தின் விருப்பங்களைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எதற்காக ஏங்குகிறீர்கள்? உங்கள் ஏக்கம் கடவுளை, அவரை மட்டுமே நோக்கியிருக்கும்படி, இன்றைய நாளில் கடவுளின் அருள் உங்களை நலமற்ற, அறிவீனமான பற்றுகளிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுவிக்கட்டும்.
ஆண்டவரே, உமது அளவற்ற இரக்கத்தோடு என்னிடம் வாரும்; நிலையற்ற இவ்வுலகின் ஆசைகளிலிருந்து என்னை விடுவித்தருளும். அனைத்திற்கும் மேலாக உம்மையே நாடவும், அந்த ஏக்கத்தில் உமது தெய்வீக அன்பில் முழுமையாக ஆழ்ந்திருக்கவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
பிப்ரவரி 3: புனித பிளாசியார், ஆயரும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு
மேலும்:
பிப்ரவரி 3: புனித அன்ஸ்கார், ஆயர்—விருப்ப நினைவு
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்



