தமிழ்

சிந்தனை 49: தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல்

மறைசாட்சியான புனித பேதுருவின் படுகொலை — ஜொவான்னி பெல்லீனி வரைந்த ஓவியம்

காணொளி

நாம் புனிதர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். அந்தப் பாதையில் நாம் நடந்தால், வீரமிகு நற்பண்புடன் வாழ அழைக்கப்படுவோம். வீரமிகு நற்பண்பை மற்றவர்கள் எப்போதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். உண்மையில், உலக ஞானத்தின் பார்வையில், வீரமும் புனிதமும் நிறைந்த நற்பண்பு மடமையாகத் தோன்றும். ஆனால் உலக “ஞானத்தின்” கருத்துகள் நம்மைக் குழப்பவோ, சோதனைக்கு உட்படுத்தவோ, உண்மையான நற்பண்பின் பாதையிலிருந்து நம் கவனத்தைத் திருப்பவோ நாம் அனுமதிக்கக் கூடாது (காண்க: நாட்குறிப்பு #126).

புனிதமான வாழ்வு வாழ நீங்கள் முயல்வதால், சில வேளைகளில் மற்றவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்களா? உங்கள் மனச்சான்றில் ஒலிக்கும் கடவுளின் குரலுக்கு முரணாகத் தோன்றும் ஏதேனும் அறிவுரைகளை மற்றவர்கள் உங்களுக்குக் கூறுகிறார்களா? நீங்கள் நடக்கும்படி கடவுள் அழைக்கும் நற்பண்பின் பாதையைப் பற்றிச் சிந்தியுங்கள். நாம் ஏற்று வாழ அழைக்கப்படும் நற்பண்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவற்றின் பாதையை உலகம் புரிந்துகொள்வதில்லை. சில வேளைகளில் அநீதியை அமைதியுடனும் நம்பிக்கையுடனும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்வதில்லை. கிறிஸ்துவுக்காகத் துன்புறும்போது நாம் அடையும் மகிழ்ச்சியை உலகம் புரிந்துகொள்வதில்லை. உங்கள் மனச்சான்றில் கடவுள் உங்களோடு பேசும் குரலின் மீது உங்கள் கவனத்தை நிலைநிறுத்துங்கள்; மற்றவர்களின் கருத்துகளோ உலகத்தின் கருத்துகளோ உங்களை வழிதவறச் செய்ய இடமளிக்காதீர்கள்.

ஆண்டவரே, வீரமிகு நற்பண்பின் பாதையில் நடக்க எனக்கு உதவியருளும். சில வேளைகளில், இந்தப் பாதையில் நடப்பதால் நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவேன். சில வேளைகளில், உமது தெய்வீகக் குரலை விட்டு விலகிச் செல்ல மற்றவர்கள் என்னைத் தூண்டுவார்கள். அன்பு ஆண்டவரே, எப்போதும் உமக்கு மட்டுமே செவிசாய்க்கவும், உமது அதிபுனிதத் திருவுளத்திற்கு மட்டுமே கீழ்ப்படியவும் எனக்கு உதவியருளும். இரக்கம் நிறைந்த உமது தெய்வீக வழிகளை எப்போதும் பின்பற்ற எனக்கு ஞானத்தையும் வலிமையையும் துணிவையும் தந்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பிப்ரவரி 18 – திருநீற்றுப் புதன்

முதல் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

 இறை இரக்கம் குறித்த மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்