தமிழ்

சிந்தனை 50: கடவுளின் குரலைக் கேட்டல்

வானதூதரால் உணவூட்டப்படும் எலியா — ஓவியர்: ஃபெர்டினாண்ட் போல்

காணொளி

நாள் முழுவதும் கடவுள் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை.  அவர் தமது உண்மையையும் உங்கள் வாழ்வுக்கான வழிகாட்டுதலையும் இடைவிடாமல் உங்களுக்குத் தெரிவிக்கிறார்; தமது இரக்கத்தையும் இடைவிடாமல் பொழிகிறார்.  ஆனால், அவரது குரல் மிகவும் மென்மையாகவும் அமைதியாகவும் இருப்பதுதான் சிக்கல்.  ஏன்?  ஏனெனில், அவர் உங்கள் முழுக் கவனத்தையும் விரும்புகிறார்.  அன்றாடம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் பலவற்றுடன் போட்டியிட அவர் முயலமாட்டார்.  தம்மை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை வற்புறுத்தமாட்டார்.  மாறாக, நீங்கள் அவரை நோக்கித் திரும்பி, கவனத்தைச் சிதறடிக்கும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, அமைதியான, ஆனால் தெளிவான அவரது குரலுக்குச் செவிசாய்க்க அவர் காத்திருக்கிறார் (காண்க: நாட்குறிப்பு #130).

கடவுள் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்களா?  உங்கள் உள்ளத்தில் அவர் எழுப்பும் மென்மையான தூண்டுதல்களுக்குச் செவிசாய்க்கிறீர்களா?  அன்றாடம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் பலவற்றால் கடவுளின் குரல் அமுங்கிப்போக அனுமதிக்கிறீர்களா? அல்லது அவற்றை வழக்கமாக ஒதுக்கிவிட்டு, இன்னும் அதிக ஆர்வத்துடன் அவரைத் தேடுகிறீர்களா?  இன்று உங்கள் உள்ளத்தில் அவர் எழுப்பும் தூண்டுதல்களை நாடுங்கள்.  இவை உங்கள்மீது அவர் கொண்டுள்ள அளவிட முடியாத அன்பின் அடையாளங்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  இவற்றின் வழியாகக் கடவுள் உங்கள் முழுக் கவனத்தையும் நாடுகிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; அனைத்திலும் உம்மைத் தேட விரும்புகிறேன்.  இரவும் பகலும் நீர் என்னோடு பேசும் வழிகளை உணர்ந்துகொள்ள எனக்கு உதவியருளும்.  உமது குரலுக்குச் செவிசாய்க்கவும், உமது மென்மையான கரத்தால் வழிநடத்தப்படவும் எனக்கு உதவியருளும்.  என் ஆண்டவரே, என்னை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கிறேன்.  நான் உம்மை அன்பு செய்கிறேன்; உம்மை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள விரும்புகிறேன்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

இரண்டாம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

தவக்காலத்திற்கான வளங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்