தமிழ்

சிந்தனை 60: ஆன்மிக வறட்சியை எதிர்கொள்ளுதல்

புனித அந்தோனியார் தமது செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தல் — சானோ டி பியெத்ரோவின் ஓவியம்

காணொளி

சில நேரங்களில் உங்கள் ஆன்மா ஆன்மிக வறட்சியில் இருப்பதுபோல் உணர்கிறீர்களா?  உங்கள் அன்றாட வாழ்வில் இன்னும் அதிகமான ஆன்மிக ஆறுதல் கிடைக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? இது பொதுவாக ஏற்படும் ஒரு போராட்டமே; இதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே நம் ஆன்மிக வாழ்வின் முதன்மையான நோக்கம்.  பல நேரங்களில், ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் வலிமையான ஆன்மிக ஆறுதல்களைவிட, ஓரளவு ஆன்மிக வறட்சி உண்மையில் இறைவனின் திருவுளத்தின்படி வாழ நமக்கு அதிகமாக உதவுகிறது.  நமக்கு என்ன தேவை என்பதை இறைவன் அறிவார்; அது நமக்குத் தேவைப்படும்போது அதை நமக்குத் தருவார் (காண்க: நாட்குறிப்பு #195).

இன்று உங்கள் உள்ளத்தில் என்ன உணர்கிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.  இன்று உங்கள் ஆன்மிக வாழ்வு எவ்வாறு இருப்பதாக உணர்கிறீர்கள்?  இப்போது அந்த எண்ணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, இறுதியில் முக்கியமானது ஒன்றே என்பதை உணருங்கள்: இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே அது; அவரது திருவுளத்தை உணர்வது அல்ல.  “நிறைவேற்றுவதே” நமது உணவாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்.  இன்று உங்கள் உணர்வுகளையும் உங்கள் செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, நம் ஆண்டவரின் திருவுளத்தின்படி வாழ அவரிடம் அருள் வேண்டுங்கள்.

ஆண்டவரே, உமது அதிபுனித திருவுளத்திற்கு இன்று என்னை மீண்டும் அர்ப்பணிக்கிறேன்.  நீர் கட்டளையிடுவதைச் செய்ய என்னை அர்ப்பணிக்கிறேன்.  உமது கட்டளைகள் அனைத்தையும் அன்பின் கட்டளைகளாக நான் காண்பேனாக.  இக்கட்டளைகளை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்வது என் ஆன்மாவுக்கு வலிமையையும் அமைதியையும் அளிப்பதாக; குறிப்பாக ஆன்மிக வறட்சியின் காலங்களில் அவ்வாறு அளிப்பதாக.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம்:
பாலைநிலத்தில் 40 நாள்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்