ஆண்ட்ரே மிரோனோவ், CC BY-SA 4.0, மூலம்: விக்கிமீடியா காமன்ஸ்
நாம் உண்மையில் எந்நிலையில் இருக்கிறோமோ அந்நிலையிலேயே நம்மைக் காண்பது கடவுள் தரும் அருள். இவ்வாறு நம்மைக் கண்டால் நாம் எதைக் காண்போம்? நமது அவலநிலையையும் ஒன்றுமில்லாமையையும் காண்போம். தொடக்கத்தில், இது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்காது. கிறிஸ்துவில் நமக்குள்ள மாண்புக்கு இது முரணாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அதுவே திறவுகோல். நமது மாண்பு “கிறிஸ்துவில்” உள்ளது. அவரின்றி, நாம் ஒன்றுமில்லை. நம்மை மட்டுமே சார்ந்திருக்கும்போது, நம்மிடம் இருப்பது அவலநிலையும் ஒன்றுமில்லாமையுமே (காண்க நாட்குறிப்பு #256).
இன்று, உங்கள் “ஒன்றுமில்லாமையை” ஏற்றுக்கொள்வதால் மனம் புண்படவோ அஞ்சவோ வேண்டாம். தொடக்கத்தில் இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லை என்றால், கடவுளின்றி நீங்கள் உண்மையில் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் காணும் அருளை அவரிடம் மன்றாடுங்கள். நம் தெய்வீக மீட்பரின்றி, நீங்கள் உண்மையிலேயே எல்லா வகையிலும் அவலநிலையில் இருப்பதை விரைவில் காண்பீர்கள். கடவுள் உங்களுக்காகச் செய்துள்ள அனைத்தையும் இன்னும் முழுமையாக உணர இது உதவுவதால், ஆழ்ந்த நன்றியுணர்வுக்கு இதுவே தொடக்கமாக அமைகிறது. இதை நீங்கள் காணும்போது, இந்த ஒன்றுமில்லாமையிலேயே அவர் உங்களைச் சந்திக்க வந்து, தமது விலைமதிப்பற்ற பிள்ளை என்னும் மாண்புக்கு உங்களை உயர்த்தியுள்ளார் என்பதை எண்ணி மகிழ்வீர்கள்.
ஆண்டவரே, இன்று எனது அவலநிலையையும் பரிதாப நிலையையும் நான் காணச் செய்தருளும். நீரின்றி நான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்ளச் செய்தருளும். அந்த உணர்வில், உமது அருளால் உமது அன்புப் பிள்ளையாகும் விலைமதிப்பற்ற கொடைக்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்க எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இருபதாம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்
புனித யோசேப்புக்கு நவநாள் செபம். மார்ச் 10-18 வரை செபிக்கப்படுகிறது.
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




