தமிழ்

சிந்தனை 124: பரிந்துரை மன்றாட்டின் இரக்கம்

ஜோஷுவா ரெனால்ட்ஸ் வரைந்த செபத்தில் குழந்தைச் சாமுவேல்

காணொளி

கடவுளின் இறை இரக்கம் உலகின்மீது நிறைவாகப் பொழியப்படுவதைக் காண விரும்புகிறீர்களா?  அந்தக் கேள்விக்கு நீங்கள் தயக்கமின்றி, “ஆம்” என்று பதிலளிப்பீர்கள் என நம்புகிறோம்; அவ்வாறே எதிர்பார்க்கிறோம்.  அது நிகழ்வதற்கும் நிகழாமல் போவதற்கும் சில விதங்களில் நீங்கள் பொறுப்புடையவர்கள் என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.  குறிப்பாக, மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் பரிந்துரை மன்றாட்டின் நேரடி விளைவாகத் தமது அளவற்ற இரக்கம் பொழியப்பட வேண்டும் என்று இயேசு தேர்ந்தெடுத்துள்ளார்.  இது உண்மை.  மற்றவர்களுக்காகச் செபிக்க நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவின் நேரடி விளைவாக இயேசு அவர்களுக்குச் சிறப்பு அருள்களை வழங்குகிறார்.  வேறு வழிகளில் அவர் வழங்கும் பல அருள்களோடு கூடுதலாக மற்றவர்களுக்கு வழங்கப்படும் அருள் இது.  உங்கள் பங்கைச் செய்யுங்கள்; மற்றவர்கள் நிறைவாக ஆசிபெறுவார்கள்.  உங்கள் பங்கைப் புறக்கணித்தால், உங்கள் செபங்களின் வழியாக அவர்களுக்காக நீங்கள் பெற்றுத்தந்திருக்கக்கூடிய அந்தக் குறிப்பிட்ட அருளை அவர்கள் பெறமாட்டார்கள் (காண்க: நாட்குறிப்பு #599).

உங்கள் பரிந்துரை மன்றாட்டிற்காகக் கடவுள் உங்களிடம் ஒப்படைத்துள்ள நபரை அல்லது நபர்களை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  இது சிறிய பொறுப்பு அல்ல.  இப்பணிக்காகக் கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.  உங்கள் செபங்களின் வழியாக மற்றவர்கள் ஆசிபெறுவார்கள்.  உங்கள் செபங்களின் வழியாக யாருக்கு ஆசிவழங்கக் கடவுள் விரும்புகிறார்?  அவர்களுக்காகச் செபிக்க உறுதியான முடிவெடுங்கள்; அதன் நேரடி விளைவாக ஆண்டவரின் இரக்கம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று நம்புங்கள்.

ஆண்டவரே, யாருக்காக நான் செபிக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, அவர்களை எனக்குக் காட்டுமாறு மன்றாடுகிறேன்.  இந்த விருப்பத்தை என் உள்ளத்தில் பதித்தருளும்.  என் பரிந்துரை மன்றாட்டில் பிரமாணிக்கமாய் நிலைத்திருக்கவும், அந்தச் செபத்தின் வல்லமையில் நம்பிக்கை கொள்ளவும் எனக்கு உதவியருளும்.  இங்கே, இப்பொழுதே (ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்) உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  குறிப்பாக, உமது தாயின் மாசற்ற இதயத்திற்கு இவரை ஒப்புக்கொடுக்கிறேன்; அன்னை தமது நிறைவான செபங்களை இவருக்காக ஏறெடுப்பாராக.  அன்னை மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பாஸ்கா காலச் செபங்கள்

பாஸ்கா காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்


நீ என்னை அனுமதித்தால் உன் வாழ்வில் என்னால் நுழைய முடியும்
ஆன்மிகச் சிந்தனைகள்