தமிழ்

சிந்தனை 170: நல்ல நாட்களிலும் கடின நாட்களிலும் உண்மையுடன் நிலைத்திருத்தல்

Sumandas1998rik, CC BY-SA 4.0, Wikimedia Commons வழியாக

காணொளி

இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்ற உணர்வு நமக்கு இருக்கும்போதும், வாழ்க்கை நன்றாகவும் மிகவும் எளிதாகவும் செல்லும்போதும் அவரை அன்பு செய்வது எளிது.  ஆனால் வாழ்க்கை சவாலாக அமையும்போது, நமக்குள்ளேயே முடங்கிக்கொள்ளும் சோதனை உடனே நமக்கு ஏற்படுகிறது; அவ்வாறு செய்வதால், இறைவன் மீதுள்ள நம் அன்பிலிருந்து விலகிவிடுகிறோம்.  ஆனால் நம் நாளின் எந்த நேரத்திலும் நாம் எதை உணர்ந்தாலும், எதை அனுபவித்தாலும் இறைவனை அன்பு செய்வதே புனிதத்தின் உண்மையான ஓர் அடையாளம்.  மழையானாலும் வெயிலானாலும், நம் இறைவன் மீதும் பிறர் மீதும் கொண்டுள்ள அன்பில் நாம் தளரக்கூடாது (காண்க நாட்குறிப்பு #893).

உங்கள் உணர்ச்சிகள் உங்கள் விசுவாசத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கிறீர்களா?  வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள், உங்கள் இறைவனுக்கு முற்றிலும் உண்மையுடன் நிலைத்திருப்பதிலிருந்து உங்களை விலக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களா?  இது உண்மையான ஒரு சோதனை; பலரும் இதில் விழுந்துவிடுகிறார்கள்.  கடினமான நாட்களையும் கடினமான தருணங்களையும் நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  மிகுந்த சவாலான தருணங்களில் உங்கள் அன்பையும் உண்மையுடன் நிலைத்திருக்கும் உறுதியையும் புதுப்பிக்க முயலுங்கள். “எளிதான வாழ்க்கை” ஒருபோதும் உங்களில் ஏற்படுத்த முடியாத மாற்றங்களை இந்தச் செயல் ஏற்படுத்துவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

ஆண்டவரே, இந்த நாளை உமக்கு அர்ப்பணிக்கிறேன்; இன்று என் முழு இதயத்தையும் உமக்கு அளிக்கிறேன்.  இன்றோ நாளையோ நான் எதை உணர்ந்தாலும், எதை அனுபவித்தாலும், அனைத்திலும் உமக்கு உண்மையுடன் நிலைத்திருக்க உறுதி அளிக்கிறேன்.  அன்றாடத் துன்பங்களோ சுமைகளோ என்னைத் தளரச் செய்து என் விசுவாசத்தைப் பாதிக்க அனுமதிக்க மாட்டேன் என வாக்களிக்கிறேன்.  என் இயேசுவே, நான் உம்மை அன்பு செய்கிறேன்; எப்போதும் உமக்கு உண்மையுடன் நிலைத்திருக்கத் தீர்மானிக்கிறேன்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூன் 19 – புனித ரொமுவால்டு, மடாதிபதி—விருப்ப நினைவு

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்